"விநோத சைக்கோ".. நைட் நேரத்தில் இதுக்காகவே வாசற்படியில் காத்திருப்பாராம்.. அலறி ஓடிய 2 பேர்.. ஏன்?
நாயை ஏவி கடிக்க வைக்கும் விநோத சைக்கோ மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது
ஹைதராபாத்: வித்தியாசமான பழக்கம் கொண்ட, சைக்கோ இளைஞர் குறித்து ஆந்திர போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வடமாநிலங்களை பொறுத்தவரையில், கடந்த காலங்களை எடுத்து கொண்டால், செல்லப்பிராணிகளை துன்புறுத்தும் சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன..
அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பு டாக்டர் ஒருவர், தனனுடைய செல்லப்பிராணியை சங்கிலியால் கட்டி காரின் பின்னால் ஓட விட்ட சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கிலி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அந்த டாக்டர், தான் வளர்த்து வரும் நாய் ஒன்றை சங்கிலியால் கட்டி, காரின் பின்னால் ஓடவிட்டார். அந்த நாய் ஒருஅளவுக்கு மேல் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தது. இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், அந்த டாக்டரை பின்னாடியே விரட்டிக் கொண்டு போய் அவரை பின் தொடர்ந்து காரை நிறுத்தினர்... பிறகு, நாயின் சங்கிலியை அவிழ்த்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சைக்கோ டாக்டர்
இதையடுத்து, தொண்டு நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்... அப்போதுதான் அவர் ஒரு டாக்டரே என்று அனைவருக்கும் தெரியவந்தது.. தெரு நாயை அகற்றும் பொருட்டாக இத்தகைய செயலை செய்ததாக காரணம் சொன்னார். இவர் என்ன டாக்டரா? சைக்கோவா? என்று நெட்டிசன்கள் திட்டித்தீர்த்தனர்.. இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இது ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

நெல்லூர்
நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிப்பாளையம், ஜன்னலாடா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.. 32 வயதாகிறது.. செல்ல நாய் ஒன்று வளர்த்து வந்துள்ளார்.. அந்த நாய்க்கு வித்தியாசமான டிரெய்னிங் ஒன்று தந்துள்ளார்.. அதாவது, தெருவில் செல்வோரை எல்லாம் துரத்தி துரத்தி சென்று கடிப்பதற்காகவே அந்த பயிற்சியை அளித்து வைத்திருந்தார்... இதற்காகவே, தினமும் நைட் நேரங்களில் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து விடுவாராம் ரமேஷ்.. அந்த வழியாக யாராவது சென்றால், உடனே தன்னுடைய நாயை ஏவி விட்டு துரத்திச் சென்று கடிக்க விடுவாராம்..

வினோத சைக்கோ
அந்த நாய் மனிதர்களை விரட்டி கடிப்பதை, பார்த்து பார்த்து ரசிப்பாராம் ரமேஷ்.. இதனால் ரமேஷ் வீட்டு வழியாக செல்வதற்கு பயந்து கொண்டு மாற்று வழியில் பொதுமக்கள் சென்று வந்தனர். இந்த விஷயம் தெரியாத 2 பேர், நேற்று முன்தினம் இரவு ரமேஷ் வீட்டு வழியாக நடந்து சென்றனர்.. இவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள்.. 2 பேர் புதிதாக தெருவுக்குள் வருவதை கண்ட ரமேஷ், உடனே நாயை அவர்கள் மீது ஏவி விட்டார். ரமேஷின் நாய் குரைத்தபடி அவர்களை துரத்திக் கொண்டு ஓடியது...

விநோத சைக்கோ
நாய் துரத்தி வருவதைக் கண்ட அவர்கள் நாயிடம் சிக்காமல் இருக்க 2 பேரும் தலை தெறிக்க ஓடினர். இதனைக் கண்ட ரமேஷ் விழுந்து விழுந்து சிரித்தார்.. அந்த நாய் வேகமாக சென்று ஒரு நபரை கடித்துவிட்டு, மறுபடியும் ரமேஷ் வீட்டிற்கு ஓடிவந்து நின்றது.. நாய் கடிபட்ட வலியால் அலறி துடித்துள்ளார்.. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு சிகிச்சை பெற்ற பிறகு, அந்த நபர் இந்த சம்பவம் குறித்து புச்சிரெட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்... இதுகுறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications