அல்லு அர்ஜுனிடம் கிடுக்குப்பிடி விசாரணை.. போலீசார் கேட்ட கேள்விகள் என்ன! வெளியான பரபர தகவல்
ஹைதராபாத்: புஷ்பா 2 ஸ்பெஷல் ஷோவில் பெண் ஒருவர் உயிரிழந்தது மிகப் பெரியளவில் வெடித்துள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணைக்கு அல்லு அர்ஜுன் இன்று ஆஜராகி இருக்கிறார். போலீசார் அவரிடம் கேட்ட கேள்விகள் குறித்தும் விசாரணை தொடர்பாகவும் சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்ட சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் சென்ற நிலையில், அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

புஷ்பா 2 அல்லு அர்ஜுன்:
இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடந்து 9 நாட்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். இருப்பினும், சில மணி நேரத்தில் அவருக்கு அம்மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் ஆவணங்கள் வரத் தாமதம் ஆனதால் ஒரு இரவு மட்டும் அவர் சிறையில் இருந்தார்.
போலீஸ் கேட்ட கேள்விகள்:
இதற்கிடையே சந்தியா தியேட்டரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு அல்லு அர்ஜுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி அல்லு அர்ஜுன் இன்று ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடந்தது. இதற்கிடையே விசாரணையின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை நாம் பார்க்கலாம்:
ஸ்பெஷல் ஷோவுக்கு நீங்கள் வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
போலீஸ் அனுமதி இல்லை என்றாலும் இந்தத் திட்டத்திற்கு (ஸ்பெஷல் ஷோவில் அல்லு அர்ஜுனை பங்கேற்க வைப்பது) ஓகே சொன்னது யார்?
வெளியே கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பது குறித்து போலீஸ் அதிகாரி உங்களிடம் தகவல் தெரிவித்தாரா?
பெண்ணின் மரணம் உங்களுக்கு எப்போது தெரியும்?
உங்களுடன் எத்தனை பவுன்சர்கள் வந்தனர்? ரசிகர்களைத் தாக்கிய பவுன்சர்கள் விவரம் என்ன?
ஆகிய கேள்விகளை போலீசார் அல்லு அர்ஜுனிடம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி மொத்தம் 20 கேள்விகளை கேட்டுள்ளனர். இதர கேள்விகளும் இரண்டு விஷயங்களை சுற்றியே இருந்துள்ளது. ஒன்று அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வர அனுமதி தரப்பட்டதா என்பது குறித்து.. அடுத்து யாருடைய அறிவுரையின் பெயரில் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வெளியே ரசிகர்களைச் சந்தித்தார். இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே அல்லு அர்ஜுனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பவுன்சர்கள் செய்த வேலை:
முன்னதாக போலீசார் கூற்றுப்படி இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்துள்ளார். அவர் சுமார் 15-20 நிமிடங்கள் தியேட்டருக்கு வெளியே ரசிகர்களைச் சந்தித்துள்ளார். அவர் அங்கே இருக்கிறார் என்ற தகவல் வந்தவுடனேயே அங்குக் கூட்டம் கூடிவிட்டது. இதையடுத்து பவுன்சர்களும் அல்லு அர்ஜுன் பாதுகாப்பு டீமும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கிருந்தவர்களை வெளியே தள்ளத் தொடங்கியுள்ளனர். அதுவே நிலைமையை மோசமாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் சிவி ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறுகையில் , "பவுன்சர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர். அங்குப் பொதுமக்கள், ரசிகர்கள் பலர் இருந்தனர். போலீசார் கூட பாதுகாப்புப் பணியில் இருந்தனர். ஆனால், பவுன்சர்கள் அனைவரையும் தள்ளினர். அவர்களின் ஒரே கவனம் விஐபி (அல்லு அர்ஜுன்) மீது மட்டுமே இருந்தது" என்று கூறினார்.
அல்லு அர்ஜுன் மறுப்பு:
மேலும், அல்லு அர்ஜுனுக்கு பெண் உயிரிழப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இருப்பினும் முதலில் அவர் தியேட்டரில் இருந்து வெளியேற மறுத்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள். படம் முடிந்த பிறகே கிளம்புவேன் என்று அல்லு அர்ஜுன் முதலில் கூறியிருக்கிறார். டிசிபி நேரடியாகத் தலையிட்ட பிறகே அல்லு அர்ஜுன் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அப்போதும் கூட வெளியே வந்து ரசிகர்களை நோக்கிக் கையசைத்து ரோட்ஷோ நடத்தியதாக போலீசார் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications