கோடிகளில் புரளும் சிரஞ்சீவி.. அப்பல்லோ உபாசனாவின் இளவரசி! மகளுக்காக ராம் சரண் செய்த செயல்
ஹைதராபாத்: 11 ஆண்டுகள் கழித்து பிறந்த தேவதைக்காக ராம் சரண் என்ன செய்துள்ளார் தெரியுமா? ரசிகர்கள் எல்லாம் வாயடைத்து போயுள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். சிரஞ்சீவியின் மகனான இவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் பெரிய ஹிட்டடித்தது.

இந்த படத்தின் இசைக்காக ஆஸ்கர் விருது கிடைத்தது. இவர் தற்போது கேம் சேஞ்சர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கை என பார்த்தால் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உபாசனா தங்களது மருத்துவ தொழிலை கவனித்து வருகிறார். ராம் சரணும் மனைவிக்கு உதவியாக இருந்து வருகிறார்.
இவர்களுக்கு 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிளின் காரா கொனிடேலா என பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கூட வெகு விமரிசையாக நடத்தினர்.
இந்த நிலையில் ராம் சரணும் உபாசனாவும் நடிப்பு , பிசினஸ் என்பதால் 8 மாதமான குழந்தை கிளின்னை பராமரிக்க ஒரு பெண்ணை ராம் சரண் நியமித்துள்ளார். அவர் பெயர் சாவித்ரி. இவர் திரைப்பிரபலங்களின் குழந்தைகளை பராமரிப்பவர். அது போல் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் குழந்தையையும் பராமரித்தவர்.
இவருக்கு மாத ஊதியமாக ரூ 5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள இத்தனை லட்சங்களா என வாயடைத்து போயுள்ளனராம். ராம் சரண் ரூ 100 கோடி வரை ஊதியம் பெற்று வருகிறார் என சொல்லப்படுகிரது. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய உபாசனாவையும் குழந்தையையும் பார்க்க ஏராளமானோர் காத்திருந்தனர்.
இந்த குழந்தைக்கு இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி தங்கத் தொட்டிலை பரிசாக அளித்ததாக சொல்லப்படுகிறது. அது போல் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தங்க ஸ்லேட் வழங்கியுள்ளார். அதில் குழந்தையின் பெயர், பிறந்த விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மாமா என்றால் சும்மாவா!












Click it and Unblock the Notifications