ஏர்போர்ட் செல்ல ரூ.5000 கேட்கும் டாக்சி டிரைவர்கள்! "விமான டிக்கெட்டை விட அதிகம்!" கதறும் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தக் காலத்தில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான டிக்கெட் விலை பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் பெரியளவில் அதிகரிக்காததே இதற்குப் பிரதானக் காரணம். அதேநேரம் விமான நிலையத்திற்கு நாம் போகும் டாக்சி ரேட் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இது பல பயணிகளுக்குச் சிக்கலாக மாறியுள்ளது.

நமது சென்னையில் ஏர்போர்ட் நகரத்திற்குள்ளேயே இருக்கிறது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ என எதில் வேண்டுமானாலும் ஏர்போர்ட் செல்லலாம்.. இருப்பினும், சென்னை தவிர்த்து பெரும்பாலான இந்திய நகரங்களில் இப்போது விமான நிலையங்கள் நகருக்கு வெளியே தான் உள்ளன. விரிவாக்கத்திற்கு இடம் இல்லாதது, ஒலி மாசு உள்ளிட்ட காரணங்களால் இதுபோல புறநகரிலேயே அமைத்துள்ளனர்.

airport taxi

விமான நிலையம்

அப்படித் தான் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலும் ஏர்போர்ட் நகருக்கு வெளியே தான் அமைந்துள்ளது.இதைப் பயன்படுத்தி டாக்சி ஓட்டுநர்கள் அதிகப் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிகாலை விமான நிலையத்திற்குச் செல்லும் டாக்சிகளின் கட்டணம் ரொம்பவே அதிகமாக இருப்பதாகப் பயணிகள் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாகப் பயணி ஒருவர் தனது அனுபவத்தை ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டாக்சி ரைட்

அதில் காலை 7 மணி விமானத்திற்கு அவர் அதிகாலை 4 மணி முதலே டாக்சியை புக் செய்ய ஆரம்பித்துள்ளார். முதலில் ஒரு டாக்சி ஓட்டுநர், ரைட்டை ஏற்றுள்ளார். பிறகு கால் செய்து எங்குச் செல்ல வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதுவே பயணிக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது. ஏனென்றால் சேரும் இடம் உள்ளிட்ட விவரங்களை டிரைவராலேயே பார்க்க முடியும்.

ரூ.5000 கேட்டு அடாவடி

இருந்தாலும் சரி என அந்தப் பயணி ஏர்போர்ட்டிற்கு போக வேண்டும் எனச் சொல்லியுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த டிரைவர் கூடுதல் பணத்தைக் கேட்டுள்ளார். இருப்பினும், செயலியில் இருக்கும் கட்டணத்தை மட்டுமே தருவேன் என அந்தப் பயணி சொல்லியிருக்கிறார். இருப்பினும், பல சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சுற்றிச் செல்ல வேண்டும் அது இது எனச் சொல்லி ரூ.5000 கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி அவ்வளவு தொகையைத் தர முடியாது என்றார். இதைக் கேட்டவுடன் டிரைவர் டிரிப்பை கேன்சல் செய்துவிட்டாராம்.

அந்த ஒரு டிரைவர் மட்டுமில்லை.. பல டிரைவர்கள் இதுபோல செய்துள்ளனர். அந்தப் பயணி பல முறை புக் செய்தபோதும் மற்ற ஓட்டுநர்களும் ₹2,000 முதல் ₹5,000 வரை பணம் கேட்டுள்ளனர். இது வழக்கமாக ஆகும் கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார். கடைசியில் அவர் தனது நண்பரின் உதவியுடன் விமான நிலையத்திற்குச் சென்றிருக்கிறார்.

என்ன செய்யலாம்

அந்த நபர் ரெட்டிட் பக்கத்தில் மேலும், "அதிகாலையில் ஹைதராபாத் விமான நிலையத்திற்குச் செல்லும்போது எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதா.. இல்லை எல்லாரும் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டீர்களா?" என்ற கேட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், இதை அப்பட்டமான பேராசை என்றும் மோசடி என்றும் குறிப்பிட்டார். அதிகாலையில் டிராபிக் குறைவாக இருக்கும்போது, இதுபோல அதிகக் கட்டணங்களை வசூலிப்பதில் நியாயமே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இப்போது விமான டிக்கெட் புக் செய்யும்போது பல தளங்களில் ஏர்போர்ட்டிற்கு செல்லும் டாக்சி வசதியும் இருக்கிறது. அதைக் கூட தேர்வு செய்யலாம் என சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அப்படி இல்லை என்றால் ஹைதராபாத் விமான நிலையம் செல்லப் பிரத்தியேகமாக இருக்கும் ஏர்போர்ட் பஸ் சேவையைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட வழித்தடங்களில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+