Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2000 கடனுக்காக.. மனைவியின் ஆபாச ஃபோட்டோ.. மார்பிங் செய்த லோன் ஆப் நிறுவனம்.. நடுங்க வைத்த ஆந்திரா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் மீனவ இளைஞர் ஒருவர் எடுத்திருக்கும் விபரீத முடிவால், மொத்த பேரும் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. யாரந்த கடன் வழங்கும் செயலி (Loan App) ஏஜெண்ட் என்று தெரியவில்லை.. இதுகுறித்த முறையான விசாரணையையும் பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 25 வயதாகும் நரேந்திரா சமீபத்தில்தான், அகிலா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.. அதாவது, இவருக்கு 47 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

andhra pradesh rs2000

தம்பதி இருவருமே விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தனர்.. ஆனால், பருவமழை மற்றும் வானிலை காரணமாக கடந்த சில நாட்களாகவே நரேந்திரா மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை சமாளிக்க வேண்டி, உடனடி கடன் செயலி மூலம் ரூ.2000 பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.

வட்டித்தொகை: பிறகு அவர் வாங்கிய தொகையை திருப்ப செலுத்த முயன்றுள்ளார். ஆனால் கடன் செயலி நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அதிக அளவிலான வட்டியை கொடுக்க வேண்டும் என்று நரேந்திராவிடம் சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்த நரேந்திரா, அந்த அளவுக்கு வட்டி தர முடியாது என்று சொல்லவும், அந்நிறுவனம் நரேந்திராவை மிரட்டல் விடுத்து துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், மொத்த பணத்தையும் உடனடியாக செலுத்தும்படி துன்புறுத்தியுள்ளார்.

பிறகு, மோசமான வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்ப துவங்கியிருக்கிறார்கள்.. எனவே நரேந்திரா தான் வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடிவு செய்தார். ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து மோசமான மெசேஜ்கள் வரத்துவங்கின

பேச்சுவார்த்தை: அதுமட்டுமல்லாமல், அந்த ஏஜெண்டிடம் நரேந்திரா மனைவி மற்றும் உறவினர்கள் செல்போன் நம்பர் இருந்துள்ளது. ஒரு வாரமாக மோசமான வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பி வந்த நிலையில், கடந்த அக்டோபர் 20ம் தேதி, நரேந்திராவின் மனைவி அகிலா படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதை அகிலா மற்றும் நரேந்திரா உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அந்த ஏஜெண்ட் அனுப்பிவிட்டார்.. இந்த படத்துடன் விலையும் சேர்த்து நிர்ணயித்துள்ளார்.

இந்த ஆபாச படம், அகிலாவின் செல்போனுக்கும் வந்துள்ளது.. தன்னுடைய ஆபாச படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அகிலா, இதுகுறித்து நரேந்திராவிடம் விசாரிக்க, அப்போதுதான் கடன் வழங்கும் செயலியில் கடன் பெற்றதாகவும், கடன் பெற்ற ஒரு வாரத்தில் இருந்து தொந்தரவு செய்வதாகவும் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

அவமானம்: ஆனால், அதற்குள் அகிலா, நரேந்திரன் இரு வீட்டு சொந்தக்காரர்களும், ஆபாச படம் குறித்து கேட்க துவங்கிவிட்டார்கள்.. இதனால், அவமானத்திலும், மனவேதனையிலும் கூனிக்குறுகி மனம் வேதனை அடைந்தார் நரேந்திரா.. தனக்கு நேர்ந்த கொடுமைகளை யாரிடம் சொல்லவும் முடியாமல், மன அழுத்தத்தில் இருந்த நரேந்திரா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதாவது, அந்த நிதி நிறுவனத்திடம் வெறும் 2 ஆயிரம் ரூபாய்தான் கடன் வாங்கியிருக்கிறார் நரேந்திரா.. 2 ஆயிரம் ரூபாயை உடனே செலுத்தும்படி டார்ச்சர் செய்ததுடன், மனைவியின் போட்டோவையே ஆபாசமாக சித்தரித்ததால், இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.. இதைக்கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள், செயலி ஏஜெண்ட் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து கோரி வருகிறார்கள்.

விசாரணை: நரேந்திராவின் குடும்பத்தினர் போலீஸ் கமிஷனரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்திருக்கிறார்கள்.. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாகவே, கடன் வழங்கும் செயலிகள் சிலரின் பொருளாதார நிலையை பயன்படுத்தி அவர்களை கடன் பெற தூண்டுகின்றன. கடன் வழங்கும்போது நல்ல விதமாக பேசும் ஏஜெண்ட்-கள், கடன் கொடுத்ததுமே, அவர்களின் பேச்சே வேறு தினுசாக மாறிவிடுகிறது.. பணத்தை வசூலிக்க எந்த அளவுக்கும் கீழே இறங்கிவிடுகிறார்கள்.. இப்படித்தான் சில மாதங்களுக்கு சேலத்தில், வெறும் 770 ரூபாய் தவணை பணத்துக்காக, மனைவியையே பிணையாக தூக்கி சென்றுவிட்டது ஒரு பிரபல வங்கி.

விழிப்புணர்வு: எனவே, இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகளை நம்பி, கடன் பெற்று சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என மாநில மற்றும் மத்திய அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பொருளாதார சூழ்நிலையில் சிக்குபவர்கள் இதுபோன்ற செயலிகளில் கடன் பெற்று தொந்தரவுக்கு ஆளாகி விடுகிறார்கள்.. இதுபோன்ற செயலிகளை கண்டறிந்து அரசுகள் நிரந்தரமாக தடை செய்தால்தான் நரேந்திரா போன்றோரின் அநியாயமான உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+