பெண்ணின் சாவுக்கு நீதி கேட்ட தந்தை.. இரக்கமில்லாமல் பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மகள் சாவிற்கு நியாயம் கேட்க வந்த தந்தையை தெலுங்கானா போலீஸார் எட்டி உதைத்து அடித்து உதைக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

Recommended Video

    மகளின் சாவுக்கு நீதி கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்

    தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி பட்டஞ்சேருவில் உள்ள நாராயணா கல்லூரி விடுதியில் 16 வயது மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மன அழுத்தம் காரணமாக சிறுமி மனச்சோர்வு அடைந்து உடல்நிலை சரியில்லாமல் போனதாக பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டினர்.

    உடல்

    மேலும் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். உடல் உபாதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மகளின் உடலை பார்க்க அவரது தந்தை வந்தார்.

    போலீஸார்

    போலீஸார்

    அப்போது அவருக்கு அனுமதி அளிக்க மறுத்த காவல் துறையினர் உதைத்து தள்ளி கேட்டு வெளியே தள்ளினர். மேலும் அந்த பெண்ணின் உடலை விடுதியில் இருந்து போலீஸார் வெளியே கொண்டு வந்தனர். அப்போது அந்த பெண்ணின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து பதப்படுத்த வேண்டும். என் மகள் சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது உடலை வெளியே கொண்டு செல்ல கூடாது என அவரது தந்தை போலீஸாரை தடுத்தார்.

    பெண்

    பெண்

    அப்போது ஆத்திரமடைந்த போலீஸ் காவலர் ஸ்ரீதர், அந்த பெண்ணின் தந்தையை எட்டி உதைத்து கடுமையாக தாக்கினார். பின்னர் அவரை தரதரவென இழுத்து வந்தனர். இந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து நெட்டிசன்கள் கூறுகையில் அவசர அவசரமாக பெண்ணின் உடலை வெளியே கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன?

    போலீஸார்

    போலீஸார்

    சூழலுக்கு தகுந்தாற்போல் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடவா போலீஸாருக்கு தெரியாது? என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் இந்த வீடியோவை பார்க்கும் போதே மனம் பதறுகிறது. இது போன்று போலீஸாரின் நடத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மற்றொரு நெட்டிசன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+