தெலுங்கானா: கேசிஆரிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறிக்கும்- பாஜகவுக்கு அதிகபட்சம் 6 சீட்- புது சர்வே

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்கிறது சவுத் ஃபர்ஸ்ட் இன்று வெளியிட்ட தேர்தல் கருத்து கணிப்பு. தெலுங்கானாவில் பாஜகவுக்கு 3 முதல் 6 இடங்கள்தான் கிடைக்கும் என்கிற இந்த சர்வே முடிவுகள்.

தெலுங்கானாவின் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 60. தெலுங்கானாவில் 2014, 2018 தேர்தல்களில் வென்று பிஆர்எஸ் ஆட்சியில் இருந்து வருகிறது.

South First Predicts Congress to defeat BRS in Telangana Assembly Election

தெலுங்கானா தேர்தல் தொடர்பான பல கருத்து கணிப்புகள், ஆளும் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றே தெரிவித்துள்ளன. இந்த முறை காங்கிரஸ் விஸ்வரூபம் எடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் அந்த கருத்து கணிப்புகள் தெரிவித்தன. அதேநேரத்தில் பாஜக எவ்வளவுதான் முட்டி மோதினாலும் சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் என்பதையும் இந்த கருத்து கணிப்புகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தன.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் இன்று சவுத் ஃபர்ஸ்ட் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுத் ஃபர்ஸ்ட் கருத்து கணிப்பின் முடிவுகள்:

காங்கிரஸ் 57 முதல் 62 இடங்கள்

பிஆர்எஸ் 41 முதல் 46 இடங்கள்

ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி 6 முதல் 7 இடங்கள்

பாஜக 3 முதல் 6 இடங்கள்

இதர கட்சிகள் 1 முதல் 2 இடங்கள்

2018 தெலுங்கானா தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்:

பிஆர்எஸ் கட்சி- 88 இடங்கள்

காங்கிரஸ் கட்சி -19 இடங்கள்

ஓவைசி கட்சி- 7 இடங்கள்

பாஜக - 5 இடங்கள்

2014 தெலுங்கானா தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்

பிஆர்எஸ் கட்சி- 99 இடங்கள்

காங்கிரஸ் கட்சி -7 இடங்கள்

ஓவைசி கட்சி- 7 இடங்கள்

பாஜக -1 இடம்.

3-வது முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைக்க நினைக்கிறது ஆளும் பிஆர்எஸ் கட்சி. ஆனால் 10 ஆண்டுகால பிஆர்எஸ் ஆட்சி மீதான அதிருப்திகளால் காங்கிரஸ் பக்கம் மக்கள் வாக்குகள் திரும்பும் என்பதைத்தான் தேர்தல் கருத்து கணிப்புகள் தற்போது வரை வெளிப்படுத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+