2 பொண்டாட்டிங்க டார்ச்சர்.. ஒரே வாரத்தில் ஓடிட்டாராமே.. ஆந்திராவில் 2வது கல்யாணம் செய்தாரே.. அவரேதான்
: 2வது திருமணம் செய்த ஆந்திரா கல்யாண் எங்கோ தலைமறைவாகி விட்டாராம்
ஹைதராபாத்: கல்யாணம் ஆகி ஒருவாரம் கூட ஆகல.. அதுக்குள்ளே பொண்டாட்டிகள் தொல்லை தாங்காமல் ஓடிவிட்டாராம் அந்த இளைஞர்..
திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண்.. டிக் டாக்கில் இவர் ரொம்ப ஃபேமஸ் ஆனவர்.. அடிக்கடி வீடியோக்கள் எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு வருகிறார்.
இவரது மனைவி பெயர் விமலா.. கடப்பாவை சேர்ந்தவர்.. டிக்டாக் வீடியோ எடுக்கும்போது, விமலாவுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஃபாலோயர்ஸ்கள்
அது காதலாக கனிந்து கல்யாணத்தில் வந்து முடிந்தது.. அதற்கு பிறகு இவர்கள் 2 பேரும் ஜோடியாகவே டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.. அதனால், இவர்களுக்கு ஃபாலோயர்ஸ்கள் மிக அதிகமாக உள்ளனர்.. இந்நிலையில், சில மாதங்களாகவே விமலா சோகமாக காணப்பட்டுள்ளார்.. ஏன் இப்படி சோகமாய் இருக்கிறாய் என்று விமலாவிடம் பலமுறை கல்யாண் கேட்டாராம்.. சரியாக பதில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.. பிறகு திடீரென ஒருநாள், விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவரை சந்தித்தேன் என்று கல்யாணிடம் சொன்னார் விமலா.

கெஞ்சல் + கொஞ்சல்
அப்போதுதான் கல்யாண் அதிர்ந்தார்.. நித்யஸ்ரீ என்பவரும் டிக்டாக் வீடியோ பதிவிடுபவர்.. கல்யாணுடன் சேர்ந்து நிறைய வீடியோ பதிவிட்டுள்ளார்.. இருவரும் விரும்பி உள்ளனர்.. பிறகு அந்த காதல் சில காரணங்களால் முறிந்தது.. போனும் துண்டிக்கப்பட்டது... கல்யாண் கடைசியில் விமலாவையும் மணந்து கொண்டார்... நித்யஸ்ரீ எங்கிருந்து எப்படி வந்தார் என்று தெரியவில்லை.. நேராக விமலாவை சந்தித்து, பழைய காதல் கதைகளை எல்லாம் புட்டு புட்டு வைத்துள்ளார்.. அதுமட்டுமல்ல, கல்யாணை பிரிந்து தன்னால் வாழ முடியாது, எப்படியாவது 2 பேரையும் ஒன்று சேர்த்து வைக்குமாறும் கெஞ்சியுள்ளார்.

சந்திரமுகி
இந்நேரம் மற்ற பெண்களாக இருந்தால், இப்படி ஒரு பேச்சை கேட்டு சந்திரமுகியாக உருமாறியிருப்பார்கள்.. ஆனால், விமலா அப்படி செய்யவில்லை.. எந்த மனைவியும் செய்யாத தியாகத்தை செய்ய முன்வந்தார்.. கல்யாணிடம், நித்யஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள சொன்னார்.. ஆனால், அப்படி திருமணம் செய்துகொண்டால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஒரே ஒரு கண்டிஷன் போட்டு, சத்தியமும் வாங்கி கொண்டார்... கல்யாண வேலையெல்லாம் விமலா இழுத்து போட்டுக் கொண்டு செய்தார்.. முழு மனதிருப்தியுடன் திருப்பதியில் கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைத்தார் விமலா.. புதுமண தம்பதியுடன் இணைந்து போட்டோவும் எடுத்துக்கொண்டார்.

ஒரே ஓட்டம்
இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானது.. இப்படியும் பெண்கள் இருப்பார்களா? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.. அதைவிட முக்கியமாக, "இந்த போட்டோவை பார்த்துவிட்டு, என் மனைவி கண்ணில் படும்வரை இதை ஷேர் செய்யவும்" என்று பல்வேறு ஆண்கள் கிண்டலாக இதற்கு கமெண்ட்களையும் பதிவு செய்து கொண்டிருந்தனர். அதேசமயம், இந்த கல்யாணம் முடிந்து 3 பேரும் திடீரென காணாமல் போய்விட்டார்களாம்.. இவர்களை பேட்டி எடுக்க நிறைய மீடியாவில் தேடியிருக்கிறார்கள்..

சஸ்பென்ஸ்
ஆனால், எங்கே போனார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தது.. இப்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.. இப்போது, கல்யாண் வீட்டை விட்டே ஓடிவிட்டாராம்.. இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல், கல்யாண் தலைமறைவாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கெஞ்சி கூத்தாடி 2வது கல்யாணத்துக்கு கணவனை சம்மதிக்க வைத்தார் விமலா.. அப்படி இருந்தும் என்ன தகராறு இவர்களுக்குள் நடந்திருக்கும் என்று தெரியவில்லை.. ஒரே வாரத்தில் இப்படி தலைதெறிக்க ஓடியிருக்கிறார் என்றால், 2 மனைவிகளிடம் என்ன பாடுபட்டிருப்பாரோ? என்ன கதிக்கு ஆளானாரோ? எங்கே போனாரோ? அட கடவுளே..!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications