"ஹை லெவல்" சேஞ்ச்.. 3 முக்கிய மேட்டரை கையில் எடுத்த திருப்பதி தேவஸ்தானம்.. திருமலை பக்தர்கள் ஹேப்பி
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 முக்கிய விஷயங்களில் கவனத்தை செலுத்த துவங்கி உள்ளதாம்
ஹைதராபாத்: முக்கியமான 3 விஷயங்களில் தேவஸ்தானம் கவனத்தை செலுத்தி உள்ளதுடன், தற்போது அதற்கான வேலைகளையும் துரிதமாக கையில் எடுத்துள்ளதாம்.. இந்த பணிகளை இன்னும் ஒருவருட காலத்திற்குள் செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
உலகப் பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கிறார்கள். அந்தவகையில், பக்தர்கள் இங்கு வந்து தங்குவதற்காக 7 ஆயிரம் அறைகள் கொண்டு தங்கும் விடுதியை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை கணக்கில் கொண்டு ஏராளமான வசதிகள் குறிப்பாக அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன..

காட்டேஜ்கள்
தரிசனத்திற்கு வரும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக ரூ.50, 100, 200 என்றும் இந்த அறைகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது... இந்த வாடகையை திடீரென உயர்த்திவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் அதிர வைத்தன.. 150 ரூபாயாக இருந்து வந்த கட்டணம் தற்போது 1000 ரூபாய்க்கு எகிறிவிட்டதாம்.. ஸ்பெஷல் ரூம்களிலும், ரூ.750 இருந்த வாடகை ரூ.2,200 ஆக உயர்ந்துவிட்டது.. எல்லாவற்றுக்கும் மேலாக, பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே ரூம்கள் கிடைக்கும். இதனால் தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருவதாக கூறப்பட்டது.

3 ப்ளான்கள்
இதையடுத்து, சில மாற்றங்களை செய்வதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகியிருந்தன.. இப்படி அதிருப்தி தகவல்கள் ஒருபக்கம் இருந்தாலும், பக்தர்களுக்கான மகிழ்ச்சி செய்திகளையும் தேவஸ்தானம் அடிக்கடி வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், இல்லாத திருமலை என்ற முன்னெடுப்பை கையில் எடுத்துள்ள தேவஸ்தானம், லட்டு பிரசாதம் வழங்க பனை ஓலைகள் பயன்படுத்தப்பட உள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.. இந்த அறிவிப்பு, பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும்நிலையில், இனி அடுத்தடுத்த முன்னெடுப்புகளை தேவஸ்தானம் செயல்படுத்த போவதாக கூறப்படுகிறது.

சூப்பர் திட்டம்
அந்தவகையில், 2 முக்கிய அறிவிப்புகளை தேவஸ்தானம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.. அதில் ஒன்று அருங்காட்சியகம் அமைப்பதாகும்.. இந்த அருங்காட்சியகத்தில், 4,000 கலைப் பொருட்களுடன் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனராம்.. அதேபோல, வெங்கடாஜலபதி கோவில் உண்டியல் மூலம் கிடைத்த, அரிய வகை நாணயங்களைக் கொண்டு, அருங்காட்சியகம் அமைக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. உண்டியலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நாணயங்களையும், ரூபாய்களையும் காணிக்கையாக செலுத்துகின்றர்..

ஆட்டோமெட்டிக்
இதில், பல அரிய வகை நாணயங்களும் காணிக்கையாக போடப்பட்டவை. அவை கிட்டத்தட்ட 42 டன் நாணயங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளனவாம். இவைகளை பிரித்தாய்ந்து, அதன்பிறகு அருங்காட்சியகம் அமைப்பதற்கான வேலைகள் துவங்க உள்ளதாக சொல்கிறார்கள். அதேபோல, லட்டு தயாரிப்பை நவீனப்படுத்துதலிலும் தேவஸ்தானம் கவனத்தை திருப்பியுள்ளது.. இதற்காக டாடா பவுண்டேஷனும், ரிலையன்ஸ் குழுமமும் 50 கோடி ரூபாய் மதிப்பில் தானியங்கி இயந்திரங்களை வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளதாம்.. இதன்மூலம் லட்டுகளின் தரத்தையும், அளவையும் அதிகரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது..

காட்டேஜ்கள்
மேலும், அங்குள்ள காட்டேஜ்களை புனரமைக்கும் வேலைகளை முடுக்கிவிடவும் தேவஸ்தானம் திட்டமிட்டு இருக்கிறதாம். ஏற்கனவே, காட்டேஜ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு, அது சலசலப்பாகி உள்ளதால், 100 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் வகையில் புதிதாக ஒரு வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இவையெல்லாமே இன்னும் ஒருவருட காலத்துக்குள் நிறைவேற்றவும் பிளான் செய்யப்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளும் ஜரூராக துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications