பாசமான தங்கை தமிழிசையை வழி அனுப்பி வைத்த தமிழக அமைச்சர்கள்.. தெலுங்கானாவில் உருக்கம்
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தலைமையில் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் ஹைதராபாத் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அண்ணன்கள் தங்களது பாசனமான தங்கையை வழி அனுப்பி வைத்தது போன்று இருந்தது.
மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து பாஜக தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்த தமிழிசை சவுந்திரராஜன் இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றார். அங்கு தமிழிசைக்கு பூங்கொடுத்து கொடுத்து தெலுங்கானா அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்றார்.

தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
இதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆளுநராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசையின் பதவி ஏற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலு மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் தெலுங்கானா பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

தமிழிசையுடன் வேலுமணி
ஆளுநராக பதவி ஏற்ற பின்னர் நடந்த விருந்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தமிழிசையுடன் பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

குரல் கொடுத்தவர் தமிழிசை
தெலுங்கானா ஆளுநராகியுள்ள தமிழிசை சௌந்திரராஜனை தமிழக அமைச்சர்கள் அனைவருக்குமே பிடிக்கும். தமிழிசை பாஜக தலைவராக இருந்த போது, தமிழக அரசுக்காக பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார். ஆளும்அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் வீசும் கடும் சொற்களுக்குள் அதிமுக தலைவர்களைவிடவும் தமிழிசை அதிக அளவு பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்து வந்தார் தமிழிசை.

பங்கேற்ற அமைச்சர்கள்
இதனால் தமிழக அமைச்சர்கள், தமிழிசை சவுந்திரராஜன் பிரிந்து சென்றதை தங்களது சகோதரி தங்களை விட்டு வெகு தூரம் பிரிந்து சென்றதை போல் உணர்ந்தனர். இதனால் தான் அவர் தெலுங்கானா ஆளுநராக பதவிஏற்ற விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் பாசத்தோடு பங்கேற்று வழி அனுப்பி வைத்துள்ளனர்.

கடின உழைப்புக்கு உதாரணம்
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். தான் சார்ந்து இருந்த இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்தார். அத்துடன் கடினமாக உழைத்தார். இதற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை, அதற்கு உதாரணம் தான் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்" இவ்வாறு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications