தெலங்கானா போராட்டம் குறித்து வாயை விட்ட.. பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா! உருவ பொம்மை எரிப்பு!
ஹைதராபாத்: தெலங்கானா போராட்டத்தை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையுடன் ஒப்பிட்டு, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பேசியிருப்பதாக எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, தெலங்கானாவில் அரசியல் கட்சிகள் தேஜஸ்வியின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) பாரதிய ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெலங்கானா உருவாக்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசப் பிரிவினை மற்றும் தெலங்கானா உருவாக்கப்பட்ட விதம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை முறையை விட மோசமானது எனக் குறிப்பிட்ட அவரது பேச்சு, தெலங்கானாவில் கடும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இக்கருத்துகளுக்குக் கட்சி பாகுபாடின்றி பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலங்கானா மற்றும் போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர், BRS செயல் தலைவர் கே. டி. ராமராவ் இருவரும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அவரது கூற்று தெலங்கானாவின் அடையாளம் மற்றும் வரலாற்றிற்கு களங்கம் என இருவரும் விமர்சித்தனர்.
இதுதொடர்பாக, ஹைதராபாத்தில் கைரதாபாத் DCC தலைவர் மோதா ரோஹித் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை தேஜஸ்வி சூர்யாவின் உருவ பொம்மையைக் கொளுத்திப் போராடினர்.












Click it and Unblock the Notifications