Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இத்தனை வாரிசுகளா? தெலுங்கானாவில் பிஆர்எஸ் தோல்விக்கு என்ன காரணம்? கேசிஆரை வாரிவிட்ட குடும்ப அரசியல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைப்பது இன்னும் சில மணிநேரங்களில் உறுதி செய்யப்பட உள்ள நிலையில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்விக்கு முதல்வர் சந்திரசேகர் ராவின் குடும்ப அரசியல் தான் காரணம் என கூறப்படும் நிலையில் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலில் இருக்கும் நபர்களின் விபரம் வருமாறு:

தெலுங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Telanagana Election Results 2023: BRS party lost because of CM Chandrasekar Rao dynasty politics

இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தெலுங்கானாவில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். தெலங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இடையே நான் முனை போட்டி உள்ளது.

தெலுங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகர் ராவ் மொத்தம் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் அவர் களமிறங்கி உள்ளார். இந்த 2 தொகுதிகளிலும் சந்திரசேகர் ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும் அவரது கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. மாறாக காங்கிரஸ் கட்சி முன்னேறி வருகிறது.

மொத்தம் 60 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பெறலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 69 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி 38 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டு ஆகும் நிலையில் 2 தேர்தலிலும் வெற்றி பெற்று சந்திசேகர் ராவ் முதல்வரான நிலையில் முதல் முறையாக அவரது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட உள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தெலுங்கானாவில் அரியணை ஏற உள்ளது.

இந்நிலையில் தான் சந்திரசேகர் ராவின் தோல்விக்கு 10 ஆண்டு ஆட்சியில் எழுந்த எதிர்ப்பு அலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கிய காரணமாக இருந்தாலும் கூட அவரது வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதுதான் குடும்ப அரசியல். அதாவது சந்திரசேகர் ராவ் முதல்வராகவும் பிஆர்எஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக அவரது மகன் கேடி ராமராவ் சிர்சிலா தொகுதி எம்எல்ஏவாகவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி பல முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார். இன்னும் சொல்லப்போனால் ஆக்டிங் முதல்வராக செயல்பட்டார்.

அதேபோல் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்எல்சியாக (தெலுங்கானா மேலவை உறுப்பினர்) உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கவிதா தோற்ற நிலையில் அவருக்கு எம்எல்சி பதவியை சந்திரசேகர் ராவ் வழங்கினார். இவரும் கட்சி, ஆட்சியில் தலையிட்டு வந்தார். கட்சியின் செயல் தலைவராக இருக்கும் இவர் நிர்வாகிகள் நியமனத்தில் தனது ஆதரவாளர்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது சந்திரசேகர் ராவ் மீது மக்களுக்கும், கட்சியினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சந்திரசேகர் ராவின் சகோதரியின் மகன் ஹரீஷ் ராவ் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அதோடு சந்திரசேகர் ராவின் மனைவி சோபாவின் சகோதரி மகன் ஜோகினபள்ளி சந்தோஷ் குமார் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இதுமட்டுமின்றி சந்திரசேகர் ராவின் அண்ணன் கல்வகுண்ட்லா ரங்கா ராவின் மகன் வம்சிதார் ராவும் பிஆர்எஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

இதுபோல் குடும்பம் மற்றும் வாரிசு அரசியல் பிஆர்எஸ் கட்சியில் வளர்ந்து கொண்டே சென்றது. இதனால் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அதோடு பாஜக தேர்தல் பிரசாரத்தில் குடும்ப அரசியல், வாரிசு அரசியலை சுட்டிக்காட்டி தொடர்ந்து விமர்சனம் செய்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் சந்திரசேகர் ராவை மேடைக்கு மேடை விமர்சனம் செய்தனர். இத்தகைய நிலையில் தான் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+