தெலுங்கானா:காங். வேட்பாளர்கள்- 3 எம்பிக்கள், 5 சிட்டிங் எம்எல்ஏக்கள், 11 கட்சி 'தாவி'கள், 6 பெண்கள்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் அறிவித்த முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 55 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 3 பேர் லோக்சபா எம்.பிக்கள்; 5 பேர் சிட்டிங் எம்.எல்.ஏக்கள், 11 பேர் பிஆர்எஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகளில் இருந்து தாவியவர்கள் மற்றும் 6 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் 115 வேட்பாளர்களை ஏற்கனவே ஆளும் பிஆர்எஸ் கட்சி அறிவித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 55 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் சுவாரசியங்கள்:
*காங்கிரஸ் மொத்தம் 55 வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 11 பேர் புது முகங்கள்.
*11 புதுமுகங்களும் வேறு கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு தாவியவர்கள். பிஆர்எஸ் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்த 8 பேருக்கும், பாஜகவில் இருந்து தாவிய 2 பேருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்த ஒருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
*பிஆர்எஸ் கட்சியில் இருந்து கட்சி தாவி காங்கிரஸ் வேட்பாளர்களாக இடம்பிடித்தவர்கள்: ஹனுமந்த ராவ், ரோஹித், குச்சடி ஸ்ரீஹரி ராவ், வெமுலா வீரேஷம், காசிரெட்டி நாராயண் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணா ராவ், சரிதா திருப்பத்தையா மற்றும் குச்சகுல்லா ராஜேஷ். பாஜகவில் இருந்து கட்சி தாவி சீட் வாங்கியவர்கள்: அகம் சந்திர சேகர் மற்றும் புரோடுதூரி வினய் குமார் ரெட்டி. முத்யாலா சுனில் குமார் ரெட்டி, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு தாவியவர்.
*11 புதுமுகங்களும் போட்டியிடும் தொகுதிகளும்: மைனம்பள்ளி ஹனுமந்த் ராவ் (மல்காஜ்கிரி), மைனம்பள்ளி ரோஹித் (மேடக்), குச்சடி ஸ்ரீஹரி ராவ் (நிர்மல்), வெமுலா வீரேஷம் (நக்ரேக்கல்), புரடுதூரி வினய் குமார் ரெட்டி (ஆர்மூர்), முத்தியாலா சுனில் குமார் ரெட்டி (பால்கொண்டா), அகம் சந்திர சேகர் (ஜஹீராபாத்). காசிரெட்டி நாராயண ரெட்டி (கல்வகுர்த்தி), சரிதா திருப்பத்தையா (கட்வால்), ஜூபல்லி கிருஷ்ணா ராவ் (கொல்லாப்பூர்) மற்றும் குச்சகுல்லா ராஜேஷ் ரெட்டி (நாகர்கர்னூல்).
*ஜாதிய அடிப்படையில் வேட்பாளர்கள்: ரெட்டி- 17 ; பிற்படுத்தப்பட்டோர்- 12; தாழ்த்தப்பட்டோர்- 12; வெலமா- 7; சிறுபான்மையினர் 3; பிராமணர்கள் 2; பழங்குடிகள் 2
*5 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மல்லு பாட்டி விக்ரமார்கா, டுட்டில்லா ஸ்ரீதர் பாபு, டி. ஜக்கா ரெட்டி, சீதக்கா மற்றும் போடம் வீரையா ஆகிய 5 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
*3 லோக்சபா எம்.பிக்களான ரேவந்த் ரெட்டி, உத்தம் குமார் ரெட்டி, கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி ஆகியோர் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். வெங்கட் ரெட்டி நல்கொண்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.
*உத்தம் குமார் ரெட்டி எம்பி, அவரது மனைவி பத்மாவதி ரெட்டி, மைனம்பள்ளி ஹனுமந்த ராவ், அவரது மகன் மைனம்பள்ளி ரோஹித் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். மகன் ரோஹித்துக்கு பிஆர்எஸ் சீட் தர மறுத்த காரணத்தாலேயே குடும்பத்துடன் கட்சி தாவியவர் ஹனுமந்த ராவ்.
*மூத்த காங்கிரஸ் தலைவர் குண்டூரு ஜனா ரெட்டியின் மகன் ஜெயவீர் ரெட்டி தனது தந்தைக்குப் பதிலாக நாகார்ஜுனாசாகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜனா ரெட்டி அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலை டெல்லியில் சந்தித்து மகனுக்காக சீட் கேட்டு மல்லுக்கட்டியவர்.
*55 வேட்பாளர்களில் மொத்தம் 6 பேர் பெண் வேட்பாளர்கள். இவர்களில் சிட்டிங் எம்.எல்.ஏ. சீதக்காவும் ஒருவர். சீதக்கா (முலுகு), பத்திரிக்கையாளர் கோட்டா நீலிமா (சனத்நகர்), தெலுங்கானா மகிளா காங்கிரஸ் தலைவர் மொகிலி சுனிதா (கோஷாமஹால்), கட்வால் ஜில்லா பரிஷத் தலைவர் சரிதா திருப்பத்தையா (கட்வால்), முன்னாள் எம்எல்ஏ என். பத்மாவதி ரெட்டி (கோடாட்) மற்றும் சிங்கபுரம் இந்திரா (ஸ்டேஷன் கான்பூர்) ஆகியோர் 55 வேட்பாளர்களில் இடம்பெற்ற பெண் வேட்பாளர்கள்.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications