முளைச்சி 3 இலை விடலை.. அதுக்குள்ள டீச்சர் அடிச்சாங்கன்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட்.. "சிக்கிய" சிறுசு!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னை பள்ளி ஆசிரியை அடிப்பதாக தன்னந்தனியாக வந்து புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மகபூர் நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் அனில் என்ற மாணவர், 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பய்யாராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்தார். இது சிறுவன் படிக்கும் பள்ளியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

காவல் நிலையம்
இந்த மாணவன் காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கு எஸ்ஐ ரமாதேவி இருந்தார். சிறுவனை பார்த்து அவரது பெற்றோர் யாரேனும் வருகின்றனரா என பார்த்தார். யாரும் வரவில்லை. பின்னர் சிறுவனிடம் போய் பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய், என்ன படிக்கிறாய் உள்ளிட்ட அடிப்படை கேள்விகளை கேட்டார் ரமா தேவி.

தியான வகுப்பில் பேச்சு
அப்போது தியான வகுப்பு எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் நான் மற்ற மாணவர்களுடன் பேசினேன். தியான வகுப்பில் அமைதியாக இருக்க வேண்டும் ஏன் பேசுகிறாய் என கேட்டு என்னை கணக்கு டீச்சர் அடித்துவிட்டார். அவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சிறுவன் மழலை பேச்சில் தெரிவித்தார்.

ஸ்னாக்ஸ் பிரேக்கில் போலீஸ் நிலையம்
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிறுவனுக்கு ஸ்னாக்ஸ் சாப்பிட பள்ளியில் பிரேக் விடப்பட்டது. அந்த இடைப்பட்ட நேரத்தில் சிறுவன் காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். சிறுவன் புகார் என்றாலும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என ரமா தேவி முடிவு செய்தார். உடனடியாக பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.

கோர்த்துவிட்ட 3 ஆம் வகுப்பு மாணவன்
அப்போதுதான் டீச்சர் அந்த சிறுவன் மீது கையை கூட வைக்கவில்லை, திட்டினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனுக்கு புத்திமதி கூறிய போலீஸார் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு காரணங்களாக குழந்தைகளை அடிக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிவிட்டு வந்தனர். அடிக்காமலேயே அடித்து விட்டதாக சொல்றானே, அடிச்சிருந்தால் பயபுள்ள என்னவெல்லாம் சொல்லியிருக்குமோ என டீச்சரின் மைண்ட் வாய்ஸ் அங்கிருந்தவர்களுக்கு கேட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications