தெலுங்கானா- தூக்கி எறிந்த விரக்தி- பாஜகவை விட்டு நடிகை விஜயசாந்தி எஸ்கேப்- காங்கிரஸில் அடைக்கலம்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிவிட்ட நடிகை விஜயசாந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் வரும் 17-ந் தேதி காங்கிரஸில் இணைய உள்ளார்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ஜன சேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது பாஜக. ஏற்கனவே 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சி நடிகை விஜயசாந்திக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.

புறக்கணிக்கப்பட்ட விஜயசாந்தி: ஏற்கனவே பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் விஜயசாந்தி. இதனால் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட எதிலும் விஜயசாந்திக்கு வாய்ப்பு தரவில்லை. தெலுங்கானா நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் விஜயசாந்தி சேர்க்கப்படவில்லை. இதனால் உச்சகட்ட அதிருப்தி அடைந்த விஜயசாந்தி, தமது எக்ஸ் பக்கத்தில் தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்ற வேண்டும் எனவும் பதிவிட்டார். இதனால் நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைகிறார் என கூறப்பட்டது.
மோடி வரவேற்பில்..: அதேநேரத்தில் சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வருகை தந்தார். பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு சென்ற வரவேற்றவர்களில் நடிகை விஜயசாந்தியும் ஒருவர். ஆனால் அப்போதே, தாம் மோடியை வரவேற்கதான் வந்தேன்; பிரதமர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் கூறினார் விஜயசாந்தி.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்நிலையில் பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் நடிகை விஜயசாந்தி. பாஜகவில் இருந்து விலகும் கடிதத்தை தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டிக்கு அவர் அனுப்பி வைத்தார். அத்துடன் வரும் 17-ந் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறார் விஜயசாந்தி. தெலுங்கானா காங்கிரஸ் கட்சி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜக- தனி கட்சி- பிஆர்எஸ்- காங்கிரஸ்- பாஜக: 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர் விஜயசாந்தி. தெலுங்கு சினிமா உலகின் லேடி அமிதாப்பச்சன் - லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர். தமிழ்நாட்டில் அதிமுக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திய தீவிரமான ஜெயலலிதா பற்றாளர். பாஜகவின் மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியையும் வகித்தார் விஜயசாந்தி. 2005-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய விஜயசாந்தி தனி கட்சி தொடங்கினார். பின்னர் அந்த கட்சியை டிஆர்எஸ் கட்சியுடன் (தற்போதைய பிஆர்எஸ்) இணைத்தார். 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். 2014-ல் அந்த கட்சியில் இருந்தும் விலகி காங்கிரஸில் இணைந்தார். 2014 சட்டசபை தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் விஜயசாந்தி. 2020ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜக பக்கம் தாவினார். தற்போது பாஜக கை கழுவிவிட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் வரும் 17-ந் தேதி காங்கிரஸில் இணைகிறார் விஜயசாந்தி.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications