Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.2,500! திராவிட மாடலே தோத்துடுச்சே! தெலங்கானாவில் காங்கிரஸின் 6 வாக்குறுதி! அசத்திய சோனியா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தெலங்கானா தேர்தலையொட்டி தமிழகத்தின் ‛திராவிட மாடல்' மற்றும் கர்நாடகா மாடல் ஆகியவற்றை விஞ்சி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது உள்பட மொத்தம் 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

Telangana Assembly Election 2023: Congress gives 6 guarantee including Rs.2,500 per month for women

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் 2 நாள் கூட்டம் தெலங்கானாவில் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த நிலையில் இன்று ரங்கரெட்டி மாவட்டம் துக்குகூடா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது 6 உத்தரவாத திட்டங்களை அறிவித்தனர். அதன்படி முதல் திட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சியை வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் 2வதாக அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதுதவிர 4வது திட்டமாக வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 5வது திட்டமாக விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 6வது திட்டமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்தது. இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தை பின்பற்றி கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்து காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதே பாணியில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+