தெலுங்கானாவில் இன்று 'அமித்ஷா அனல்'..வாங்கி கட்டுவாரா கேசிஆர்? 'ஆட்டத்துக்கு' காங்கிரஸ் வெயிட்டிங்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கம்மம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை அமித்ஷா விமர்சிப்பாரா? அல்லது காங்கிரஸை மட்டுமே டார்கெட் செய்வாரா? என்பது எதிர்பார்ப்பு.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிஆர்எஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 115 வேட்பாளர்களை முதல்வர் கேசிஆர் அறிவித்துள்ளார். பாஜக, காங்கிரஸும் வேட்பாளர்கள் தேர்வில் படும்மும்முரமாக இருக்கின்றன.

Telangana Assembly Election 2023: Union Minister Amit Shah to visit today

இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தெலுங்கானாவில் முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய அளவில் மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமான போக்கை பல்வேறு பிரச்சனைகளில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி வெளிப்படுத்தி வருகிறது. தற்போது தேர்தல் நடைபெறும் நிலையில் திடீரென பாஜகவுக்கு எதிராக குரலை உயர்த்தி பேசுகிறது கேசிஆர் கட்சி. பாஜகவின் பி டீம் என்ற விமர்சனத்தையும் ஏற்கனவே கேசிஆர் கட்சி வாங்கி வைத்திருக்கிறது. இதற்கு ஏதுவாக காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியிலும் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி இடம்பெறவும் இல்லை.

இப்பின்னணியில் இன்று கம்மம் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். பாஜகவைப் பொறுத்தவரையில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியை விமர்சித்துதான் ஆக வேண்டும் என்கிற நிலை. இன்றைய கூட்டத்தில் அமித்ஷா, கேசிஆரை வெளுத்து வாங்குவாரா? இல்லை பல பிரச்சனைகளில் ஆதரிக்கும் பிஆர்எஸ் கட்சி என்பதால் அமைதி காப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.

இன்றைய அமித்ஷாவின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக வைத்து தமது இன்னிங்ஸை காங்கிரஸும் ஆடக் காத்திருக்கிறது. இதனால் தெலுங்கானாவில் இன்று அமித்ஷா மேற்கொள்ளும் பிரசாரம் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.

அமித்ஷா பயணம்: ஆந்திராவில் இருந்து பத்ராசலம் வருகை தருகிறார் அமித்ஷா. அங்கு சீதாராம சுவாமி கோவிலில் அமித்ஷா வழிபாடு நடத்துகிறார். பிற்பகலில் கம்மம் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதேபோல பாஜக மாநிலா ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களுடனும் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+