தெலுங்கானா: 2 தொகுதிகளில் கேசிஆர் போட்டி! 115 வேட்பாளர்களுடன் முதல் பட்டியல் வெளியீடு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆளும் பிஆர்எஸ் கட்சியின் (பாரத் ராஷ்டிர சமிதி) முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இன்று வெளியிட்டார். 115 தொகுதிகளுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை கேசிஆர் வெளியிட்டார்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 60 இடங்கள். 2014 மற்றும் 2018 தேர்தல்களில் தெலுங்கானா சட்டசப்பை தேர்தல்களில் முந்தைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி- தற்போதைய பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே (பிஆர்எஸ்) வென்றது. தெலுங்கானா முதல்வராக 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார் சந்திரசேகர ராவ்.

2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களைக் கைப்பற்றியது. 2014 தேர்தலில் 103 இடங்களில் வென்றிருந்தது. 2018-ல் காங்கிரஸ் கட்சி 19 இடங்களைக் கைப்பற்றியது. 2014 தேர்தலில் வெறும் 5 இடங்களில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.
தெலுங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் பாஜக, இடதுசாரிகள், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவின் ஒய்.எஸ்.ஆர்.டி.பி, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகியவையும் தேர்தல் களத்தில் உள்ளன.
குதிகளில் கேசிஆர் போதெலுங்கானாவில் பாஜக விஸ்வரூபம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சவாலாகவும் காங்கிரஸின் இருப்பை அழிக்கவும் பாஜக முனைப்புடன் இருக்கிறது.
தெலுங்கானா தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கும் நிலையில் இன்று ஆளும் பிஆர்எஸ் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வெளியிட்டார். மொத்தம் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் சிட்டிங் எம்.எல்.ஏக்கள். தெலுங்கானா முதல்வர் கேசிஆர் கஜ்வெல், கமரெட்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications