உங்கள் மகனை முதல்வராக்க முடியாது.. தெலுங்கானாவில் அனலாய் கொதித்த அமித்ஷா.. கேசிஆர் மீது கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தெலுங்கானாவில் தனது மகன் கேடி ராமராவை முதல்வராக்க சந்திரசேகர் ராவ் விரும்புகிறார். ஆனால் இந்த முறை பாஜகவை சேர்ந்த யாராவது ஒருவர்தான் முதல்வராக போகிறார்கள் என்று தெலுங்கானாவில் கட்சி கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறினார்.

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பு தேர்தலுக்காக முதல் முறையாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களின் 119 எம்.எல்.ஏக்கள் தெலுங்கானாவில் பாஜக களம் இறக்கியுள்ளது.

telangana assembly election this time neither KCR nor KCR will become the CM says Amit shah slams

தெலுங்கானாவில் தொகுதிகளில் பயணம் செய்து மக்களின் கருத்துகள், வேட்பாளர்கள் யாராக இருந்தால் வெல்லும் வாய்ப்பு என்பதை எல்லாம் இந்த எம்.எல்.ஏக்கள் குழு ஆய்வு செய்ய உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை செப்டம்பர் முதல் வாரம் வெளியிட பாஜக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ராஷ்டிர சமிதி, 115 தொகுதிகளுக்கு வேட்பாளரை வெளியிட்டுள்ளது. அதேபோல் ஐதரபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான ஓவைசியுடன் கூட்டணி தொடரும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார். இதனிடையே, நேற்று கம்மம் பகுதியில் நடைபெற்ற பாஜககூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியதாவது:-

ஓவைசியுடன் கடந்த 9 ஆண்டுகளாக கூட்டணி வைத்து கொண்டுள்ள நீங்கள் (பி.ஆர்.எஸ்) தெலுங்கானா முக்தி சங்கரத்தின் போராளிகளின் கனவை நீங்கள் உடைக்கிறீர்கள். தெலுங்கானாவின் இளைஞர்கள் மாநில விடுதலைக்காக தங்கள் உயிரை நீத்தனர். ஆனால் நீங்கள் இரசாக்கர்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்" என்று விமர்சித்தார். ஓவைசி கட்சியை இரசாக்கர்களுடன் ஒப்பிட்டு அமித்ஷா சாடினார்.

நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில், ஐதராபாத் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதை இரசாக்கர்கள் என்ற படை எதிர்த்தது. இதைக் குறிப்பிட்டே அமித்ஷா விமர்சித்துள்ளார். தொடர்ந்து அமித்ஷா கூறுகையில், "கேசிஆர் தனது மகன் கேடிஆரை முதல்வராக்கும் கனவுடன் உள்ளார். ஆனால், இந்த முறை இரண்டு பேரில் யாருமே முதல்வராக போவது இல்லை. பாஜகவில் இருந்து யாராவது ஒருவர் தான் முதல்வராக போகிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+