தெலுங்கானாவில் கணிப்புகளை பொய்யாக்க பாஜக வியூகம்.. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல், சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாஜகவும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலையும் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பாஜக எம்.பி சோயம் பாபு ராவ் பொத் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளர். அரவிந்த் தர்மபுரி, கோர்டலா தொகுதியிலும் பண்டி சஞ்சய் குமார் கரிம்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications