மயோனைஸ் பிரியர்களை அதிர வைத்த செய்தி.. தெலுங்கானாவில் விற்பனைக்கு தடை.. பின்னணி என்ன?
ஹைதராபாத்: சாண்ட்விச், பர்கர், கிரில் சிக்கன், மோமோஸ் உள்ளிட்ட உணவுகளுடன் மையோனைஸ் சேர்த்து சாப்பிடுவது பலருக்கும் விருப்பமான ஒன்று. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மையோனைஸ் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ், சாண்ட்விச், ஷவர்மா, பர்கர், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், மோமோஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் மையோனைஸ் பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது கொழுப்பு நிறைந்தது.

கடந்த சில நாட்களாக தெலுங்கானாவில் உணவு தரம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்தன. பலரும் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஹைதராபாத்தில் அண்மையில் முன் தினம் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக நடந்த ஆய்வில், இந்த உடல் உபாதைகளின் பின்னணியில் முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்திச் செய்யப்படும் மையோனைஸ் இருப்பது தெரியவந்துள்து. மையோனைஸ் சேர்த்து சாப்பிட்டவர்களுக்கே உடல் நல பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கடைகளில் மையோனைஸ் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் மயோனைஸ் சேர்த்த உணவு சாப்பிட்ட பலர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மயோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களில் உள்ள மையோனைஸ் பிரியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications