ஊருக்காக சாலை அமைக்க சொந்த வீட்டையே ஜேபிசி வைத்து இடித்து ஒப்படைத்த பாஜக எம்எல்ஏ
ஹைதராபாத்: சாலை விரிவாக்கப் பணிக்காக தன்னுடைய வீட்டை தானே முன்னின்று ஜேசிபியை வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார் பாஜக எம்எல்ஏ. மேலும் தனது வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய பின், அந்த இடத்தை நகராட்சியிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம் வண்டலூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணா ரெட்டி பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியாவார். இவர் கடந்த நவம்பரில் நடந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இதே தொகுதியில் தான் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் இன்றைய முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரை சந்தித்தார். இதில் கேசிஆர் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையுமே தோற்கடித்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

இதனால் பாஜகவில் மட்டுமின்றி தெலுங்கானாவே யார் இந்த ரமணா ரெட்டி என்று சமூக ஊடங்களில் தேடியது. தெலுங்கானா மாநிலத்தை தாண்டி நாடு முழுவதுமே ரமணா ரெட்டி முகம் வெளியே தெரியவந்தது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ரமணா ரெட்டி செய்த ஒரு செயல் கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களிலும், தெலுங்கானா மாநிலத்திலும் பலராலும் பாராட்டப்படுகிறது. பாஜக எம்எல்ஏ ரமணா ரெட்டி எம்எல்ஏவாக உள்ள கம்மாரெட்டி தொகுதி நகராட்சியை ஒட்டி உள்ள பகுதியாகும். மாஸ்டர் பிளான் திட்டப்படி தற்போது காமாரெட்டி பகுதியில் சாலையை 30 அடியில் இருந்து 80 அடிக்கு அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக கம்மா ரெட்டியில் பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே கேட் இடையே சாலை மற்றும் கட்டிடங்களை, மின்சாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சாலையை பாஜக எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் ரமணா ரெட்டி பல வருடங்களாக குடியிருந்த கிராமத்து சொந்த வீடும் இருந்தது.
இதனிடையே 30 அடியில் இருந்து 80 அடியாக சாலை மாற்றத்தால் கம்மா ரெட்டி பகுதியில் பலர் தங்களது வீடு, கடைகளை இழக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் எம்எல்ஏ ரமணா ரெட்டி சொந்த வீட்டையும் எம்.எல்.ஏ. இடிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இந்நிலையில், நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் தனது வீட்டை ரமணா ரெட்டியே முன் நின்று இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார். மேலும் மக்களும் சாலை அகலப்படுத்தும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து ரமணா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, எனக்கு வீட்டை விட மக்கள் நலனே முக்கியம். நான் ஒன்றும் இதற்காக பெரிய தியாகத்தை செய்துவிடவில்லை. மக்களுக்கோ, அதிகாரிகளுக்கோ ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. மக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இதே போன்று சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் தாருங்கள் என்றார். பாஜக எம்.எல்.ஏ. ரமணா ரெட்டியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக உள்ளது.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications