தெலுங்கானா முதல்வர் கேசிஆர் திடீர் அறிவிப்பு- பாரதிய ராஷ்டிரிய சமிதி- தேசிய கட்சி தொடங்குகிறார்!
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தாம் பாரதிய ராஷ்டிரிய சமிதி எனும் தேசிய கட்சி தொடங்க ஆலோசித்து வருவதாக அறிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். ஆனால் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியில் இடம் பெறுவதற்கு பெரும்பாலான தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆளுநருடன் மோதல்
இதனால் சந்திரசேகர ராவின் முயற்சிகள் கைகூடாமல் இருந்தன. அதேநேரத்தில் பாஜகவை மிக கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார் சந்திரசேகர ராவ். குறிப்பாக மத்திய அரசின் பிரதிநிதியாக கருதப்படுகிற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மிக கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் சந்திரசேகர ராவ். தெலுங்கானா சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையே இடம்பெறாமல் செய்தார் சந்திரசேகர ராவ்.

பிகே-டிஆர்எஸ் ஒப்பந்தம்
இந்நிலையில் 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் சந்திரசேகர ராவ் ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரசாந்த் கிஷோரும் சந்திரசேகர ராவ் வீட்டிலேயே தங்கி ஆலோசனை நடத்தினார்.இதுவும் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

காங்கிரஸ்- பிரசாந்த் கிஷோர்
2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையக் கூடும் என கூறப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அப்போதுதான் சந்திரசேகர ராவுடன் பிரசாந்த் கிஷோர் கை கோர்த்தார். இது காங்கிரஸை கடும் அதிருப்தி அடையச் செய்தது. இதனையடுத்து தாம் காங்கிரஸில் இணையப் போவது இல்லை; காங்கிரஸுக்கு இப்போது தேவை சரியான தலைமை மட்டுமே என கூறினார் பிரசாந்த் கிஷோர்.

சந்திரசேகர ராவின் தேசிய கட்சி
இத்தனை பரபரப்புகளுக்கு இடையே இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சந்திரசேகர ராவ். அப்போது, பாரதிய ராஷ்டிரிய சமிதி எனும் தேசிய கட்சி ஒன்றை தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அறிவித்தார் சந்திரசேகர ராவ். மேலும் தெலுங்கானா மாடல் எனும் தெலுங்கானா ஆட்சி வெற்றிகரமான ஒன்று. இதனையே தேசிய அரசியலுக்கும் நாங்கள் முன்வைக்கிறோம். ஆகையால் தேசிய அரசியலிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முக்கிய பங்கு வகிக்கும். எங்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றார் அவர். அதேபோல் நாட்டுக்கு இப்போது தேவை அரசியல் முன்னணி அல்ல; நாட்டுக்கு தேவை ஒரு மாற்றமே என்றும் சுட்டிக்காட்டினார் சந்திரசேகர ராவ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications