தெலுங்கானா: கேசிஆர்-க்கு வாழ்வா? சாவா?- ‘சுற்றி வளைத்த’ காங்கிரஸ்- கமரெட்டியில் மாநில தலைவர் போட்டி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அதி உச்ச பரபரப்பாக முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவை எதிர்த்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டி போட்டியிடக் கூடும் என்கிற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என்கின்றன சில கருத்து கணிப்புகள். ஆனால் தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையக் கூடும்; பாஜக ஆதரவுடன் பிஆர்எஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்படுகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் கஜ்வெல் மற்றும் கமரெட்டி தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக வெங்கட்ராமண் ரெட்டி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இன்று தமது வேட்பாளரை அறிவிக்கக் கூடும் என்கின்றன அக்கட்சி தகவல்கள்.
கமரெட்டி தொகுதிதான் இப்போது தெலுங்கானா தேர்தலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் முதல்வர் கேசிஆருக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு நடுவே முதல்வர் கேசிஆரை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி களமிறங்குவார் என்கின்றன அக்கட்சி தகவல்கள். இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். இத்தொகுதியில் காங்கிரஸின் ஷபீர் அலிதான் வேட்பாளர் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது ஷபீர் அலிக்கு நிஜாமாபாத் அர்பன் தொகுதி கொடுக்கப்பட இருக்கிறதாம். ரேவந்த் ரெட்டி லோக்சபா தொகுதி எம்.பியாக இருக்கிறார். கமரெட்டி தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. இதனால் முதல்வர் கேசிஆருக்கு கமரெட்டி தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்கின்றன ஊடக தகவல்கள்.
கமரெட்டி நிலவரம்: 2012-ம் ஆண்டு முதல் கமரெட்டி தொகுதியில் பிஆர்எஸ் கட்சி வென்றுள்ளது. 8 முறை இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. தெலுங்குதேசம் கட்சியும் இங்கே அறுவடை செய்திருக்கிறது. 2018 தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 42.02% வாக்குகளையும் காங்கிரஸ் 39.21% வாக்குகளையும் இத்தொகுதியில் பெற்றிருந்தன. பாஜகவுக்கு வெறும் 9.52% வாக்குகள் கிடைத்திருந்தது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸை டம்மி ஆக்குதா தவெக? ஒரே நாளில் சொதப்பிய விஜய்யின் டெல்லி பயணம்! அப்ப பாஜக லேசில் விடாதே -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications