தெலுங்கானா தேர்தல்: சூடுபிடிக்கும் களம்.. பாஜக - நடிகர் பவன் கல்யாண் கட்சி இடையே உடன்பாடு
ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து அறிவிப்போம் என பாஜக தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.

கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்க சாத்தியம் இல்லை என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இதனிடையே, தெலுங்கானாவில் பாஜகவுக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என பாஜக எம்.பி லக்ஷமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்ஷமன் கூறுகையில், " பவன் கல்யாணுடன் நேற்று நானும் பாஜக தலைவர் கிஷன் ரெட்டியும் பேச்சுவார்த்தை நடத்தினோம். .
இதில் நாங்கள் ஒன்றாக போட்டியிடுவது என முடிவு செய்து இருக்கிறோம். இரு கட்சிகளின் இலக்குமே பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக பார்ப்பதுதான். லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என பவான் கல்யாண் தெரிவித்து இருக்கிறார்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications