முதல்வர் சந்திரசேகர்ராவ் தோல்வி! காமரெட்டியில் பாஜக வேட்பாளரிடம் வீழ்ந்தார்.. கஜ்வெல்லில் வெற்றி
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காமரெட்டி தொகுதியில் முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜக வேட்பாளர் வெங்கடரமணாவிடம் தோல்வியடைந்தார். அதோடு சந்திரசேகர் ராவ் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அவர் கஜ்வெல் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.
தெலங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தெலுங்கானாவில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகராவ் உள்ளார். தெலங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இடையே நான் முனை போட்டி உள்ளது.
தெலங்கானா முதல்வராக உள்ளார் சந்திரசேகர் ராவ் மொத்தம் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் அவர் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
குறிப்பாக காமரெட்டி தொகுதியில் அவர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தொகுதியில் சந்திரசேகர் ராவை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இருந்து வந்தார். அதன்பிறகு அவர் பாஜக வேட்பாளர் கட்டி பள்ளி வெங்கடரமணா வேகமாக முன்னேறினார். இறுதியாக வெங்கடரமணா வெற்றி பெற்றார்.
இதன்மூலம் தற்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் ரேஸில் உள்ள ரேவந்த் ரெட்டியை அவர் வீழ்த்தி கெத்து காட்டியுள்ளார். தெலுங்கானாவில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை எனக்கூறி வந்த நிலையில் வெங்கட ரமணா ஒரே தொகுதியில் சந்திரசேகர் ராவ் மற்றும் ரேவந்த் ரெட்டியை காலி செய்துள்ளார். இருப்பினும் ரேவந்த் ரெட்டி தனது 2வது தொகுதியான கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் சந்திரசேகர் ராவ் தனது 2வது தொகுதியான கஜ்வெல்லில் முன்னிலையில் உள்ளார். இங்கு அவரை எதிர்த்து பாஜகவின் மூத்த தலைவர் எட்டலா ராஜேந்தர் களமிறங்கி உள்ளார். இங்கு முதலில் எட்டலா ராஜேந்தர் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். இறுதியாக கஜ்வெல் தொகுதியில் சந்திரசேகர் ராவ் 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 ஓட்டுகள் பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் எட்டலா ராஜேந்தரை 45,031 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் சந்திரசேகர்ராவ் மீண்டும் எம்எல்ஏவாக தெலுங்கானா சட்டசபைக்குள் நுழைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications