"வாரிசு அரசியலின்" கோர முகம்! அப்பா கேசிஆர் அரசியல் கதையை முடிக்கும் மகன் கேடிஆர்- தெலுங்கானா ஷாக்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்திருப்பது அக்கட்சியிலும் புயலை கிளப்பி இருக்கிறது. பிஆர்எஸ் கட்சித் தலைவரான மாஜி முதல்வர் கேசிஆருக்கு எதிராக அக்கட்சியில் அதிருப்தி குரல்கள் வெடித்து கிளம்புகின்றன.
தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்தே 2014 முதல் 2 முறை முதல்வராக பதவி வகித்தார் கே.சந்திரசேகர ராவ். தெலுங்கானாவில் அசைக்க முடியாத ஒரு அரசியல் கட்சியாக பிஆர்எஸ் விஸ்வரூபம் பெற்றிருந்தது. பிஆர்எஸ் கட்சிக்கு கண்ணுக்கு எட்டிய தொலைவில் எதிரிகளே இல்லை என்பதுதான் கள யதார்த்தமாக இருந்தது. 2014-ல் 21 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி 2019-ல் 19 இடங்களாக சுருங்கிப் போனது. தெலுங்கானாவில் எப்படியாவது போராடி காலூன்றலாம் என நினைத்த பாஜகவுக்கு அப்படி ஒன்றும் முன்னேற்றமும் இல்லை. ஆந்திராவை போல தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போனியாகவில்லை. அதுவும் இந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை.

அலட்சியமான நிலையில் கேசிஆர்: 2014,2018 தேர்தல் முடிவுகள் பிஆர்எஸ் கட்சிக்கு பெரும் நம்பிக்கையையும் ஒருவித அசால்ட் தனத்தையும் கொடுத்தது. எதிர்க்கட்சிகளே இல்லாத மைதானத்தில் ஆடுவதில் ரொம்பவே களைத்துதான் போனது பிஆர்எஸ். அதேநேரத்தில் ஆட்சியிலும் கட்சியிலும் கேசிஆர் மகன் கேடி ராமராவ், கவிதா ஆகியோரது செயல்பாடுகள் பேசு பொருளாகின. மகள் கவிதா, மதுபான ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டார். இந்த ஊழல் விவகாரம் பிஆர்எஸ் கட்சிக்கு எதிரான பிரசாரத்துக்கு வலுவான ஆயுதமாக இருந்தது.
கேடிஆர் புறக்கணிப்பு: இன்னொரு பக்கம், தெலுங்கானா தேர்தலை இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டும் என அப்பா கேசிஆருக்கு மகனும் பிஆர்எஸ் செயல் தலைவருமான கேடி ராமராவ் மெனக்கெட்டுப் பார்த்தார். பிஆர்எஸ் கட்சியில் களநிலைமையை நன்கு உணர்ந்தவராக இருந்தார் கேடி ராமாராவ். ஆனால் கேடி ராமராவின் ஆலோசனைகளை பெரும்பாலும் புறக்கணிக்கக் கூடியவராகவே கேசிஆர் இருந்தார்.
கேசிஆர் வியூகம் தோல்வி: கேடிஆர் சொன்னது போல களமிறக்கப்பட்ட 10 வேட்பாளர்களில் 9 பேர் வெற்றியும் பெற்றனர். கேடிஆர் எவ்வளவோ சொல்லி தடுத்தும் பார்த்தும் 'தலைவர்' என்ற கோதாவில் கேசிஆர் நிறுத்திய பல சீனியர் அமைச்சர்கள் தோல்வியைத் தழுவித்தான் போயினர். இதனால் இப்போது கேடிஆர் பேச்சை கேட்டிருந்தால் இவ்வளவு மோசமான தோல்வி வந்திருக்காது என்கிற புலம்பல்கள் வெடித்து கிளம்பிவிட்டன.
பிஆர்எஸ் தலைவராக கேடிஆர்?: அத்துடன் நிற்கவில்லை.. கேசிஆருக்கு பதில் பிஆர்எஸ் கட்சித் தலைவராக கேடிஆரை கொண்டுவரலாம்.. கேடிஆரின் வியூகம்தான் சரியாக இருக்கும். கேசிஆர், கவிதாவை ஓரம்கட்டிவிட்டு பிஆர்எஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்போம் என்கிற 'வேற மாதிரியான' குரல்களும் வலுவடையத் தொடங்கிவிட்டன. தெலுங்கானா தேர்தல் முடிவுகள் எனும் புயல் இப்போது பிஆர்எஸ் கட்சியில் மையம் கொண்டிருக்கிறது. அனேகமாக இந்த ரிசல்ட் புயல் கேசிஆரின் கட்சித் தலைவர் பதவியையும் மட்டுமல்ல.. அவரது ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்துக்கும் முடிவுரை எழுதிவிட்டுதான் கரைசேரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications