சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம்.. தெலுங்கானா அரசு அதிரடி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ் இ, ஐசிஎஸ் இ, ஐபி என எந்த பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் என்று அம்மாநில அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைகளுக்கு நடுவே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9, 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயம் ஆக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. பிற தாய்மொழி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் மற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெலுங்கானா மாநில பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்க்கு மொழி பாடம் கட்டாயம். CBSE, ICSE, IB என எந்த விதமான பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் இந்த விதி பொருந்தும் எனவும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தெலுங்கை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வெளி மாநில மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் எளிமையான முறையில் தெலுங்கு கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டே தெலுங்கு மொழி கட்டாயம் ஆக்கி தெலுங்க்கானாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை. முந்தைய அரசு, தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் ஆக்குவதில் அக்கறை காட்டவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. புதிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.
இந்த நிதியை ஒதுக்குமாறு கேட்டு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தர முடியும் என மத்திய கல்வி அமைச்சர் பேசியதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. இத்தகைய பரபரப்புக்கு இடையேதான் தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications