தெலுங்கானாவில் தமிழ்நாடு மாடல்.. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்த கேசிஆர் அரசு! செம
ஹைதராபாத்: தமிழ்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளதைப் போல நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் இப்போது காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூர கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்றும் அதன் பிறகு இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அப்போதே அறிவிக்கப்பட்டது.
தெலுங்கானா: அதன்படி கடந்தாண்டு செப். மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு முழுக்க இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் இது விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது. நாடு முழுக்க இருந்தும் பலரும் இத்திட்டத்தை வரவேற்றனர். இதற்கிடையே இத்திட்டம் குறித்துத் தெரிந்து கொள்ளத் தெலுங்கானா அரசு அதிகாரிகளும் கூட சமீபத்தில் சென்னை வந்தனர்.
தமிழ்நாட்டில் அமல்படுத்தும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து அவர்கள் தெரிந்து கொண்டனர். இதற்கிடையே தெலுங்கானாவிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 24 முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்: மாணவர்களுக்குத் தசரா பரிசாக இந்த "முதலமைச்சரின் காலை உணவு" திட்டத்தைக் கொண்டு வருவதாக அம்மாநிலத்தை ஆளும் கேசிஆர் கட்சியினர் கூறுகின்றனர். இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.400 கோடியைத் தெலுங்கானா அரசு செலவிட உள்ளது. இது குறித்த அரசாணையைத் தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், சத்தான காலை உணவைப் பெறுவதை இந்தத் திட்டம் உறுதி செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி கற்கும் அனுபவம் மேம்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்யவும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைக்கவும், இந்த காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்குவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தகவல்: சமீபத்தில் தமிழ்நாட்டிற்குத் தெலுங்கானா அரசு அதிகாரிகள் சென்று திரும்பிய நிலையில், இந்தத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தெலுங்கானா அதிகாரிகள் கூறுகையில், "சமீபத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாட்டிற்குத் தெலுங்கானா அரசு அதிகாரிகள் சென்று வந்தனர். அதைத் தொடர்ந்தே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தால் மாநிலத்தின் நிதிச் சுமை அதிகரிக்கும். இருப்பினும் செலவைக் கருத்தில் கொள்ளாமல், இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்" என்று அவர் தெரிவித்தார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications