உச்சிக்கேறிய கோபம்.. பாதுகாவலரை மேடையிலேயே அறைந்த உள்துறை அமைச்சர்.. பரவும் ஷாக் வீடியோ
ஹைதராபாத்: தெலங்கானாவில் பூங்கொத்து கொடுக்க காலதாமதம் செய்ததால் மேடையிலேயே உள்துறை அமைச்சர் மகமுத் அலி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் முதல் அமைச்சராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தெலங்கனாாவில் உள்துறை அமைச்சராக இருப்பவர் மகமுத் அலி. இவர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு சேவைகள் துறைகளையும் கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.
அதேபோல் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் தாலசானி சீனிவாஸ் யாதவ். இவர் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இந்த விழாவுக்கு உள்துறை அமைச்சர் மகமுத் அலி சென்றார். மேடைக்கு சென்ற மகமுத் அலி, அமைச்சர் தாலசானி சீனிவாசை ஆரத்தழுவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பிறகு அவர் தனது அருகே உள்ள பாதுகாவலரிடம் பூங்கொத்து கேட்டார். அது அவருக்கு சரியாக கேட்கவில்லை. இதனால் என்ன வேண்டும் சார்? என பாதுகாவலர் கேட்க முயலவே, கோபமடைந்த மகமுத் அலி கையை நீட்டி அவரை அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர் உடனே அருகில் இருந்தவரிடம் பூங்கொத்து வாங்கி மகமத் அலியிடம் கொடுத்தார். அதனை அவர் அமைச்சர் தாலசானி சீனிவாஸ் யாதவிடம் வழங்கினார்.
இதற்கிடையே தான் பாதுகாவலரை உள்துறை அமைச்சர் மகமத் அலி மேடையில் வைத்து அறைந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர் மகமத் அலியின் இந்த செயலுக்கு பரம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜகவை சேர்ந்த ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், ‛‛தெலுங்கானா உள்துறை அமைச்சர் பூங்கொத்து கொடுக்க தாமதித்ததால், பொதுமக்கள் முன்னிலையில் அவரது பாதுகாவலை அறைந்தது வெட்கக்கேடானது. இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. போலீஸ் அதிகாரியின் வேலை என்பது பூங்கொத்து கொடுப்பதா? இல்லை பாதுகாப்பு வழங்குவதா? இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.
இது குடும்ப அரசியல், ஊழலின் ஊற்றாக இருக்கும் பிஆர்எஸ் கட்சியின் விவிஐபிக்களின் திமிர்பிடித்த மனநிலையை எடுத்து காட்டுகிறது. இவர் தான் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை இழிவுப்படுத்தினார். இன்று பாதுகாவலரை அறைந்துள்ளார். இதனால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிட்டு அனைத்து போலீஸ் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவாரா? இல்லை வாக்குவங்கி அரசியலுக்காக அவரை தொடர்ந்து பதவியில் இருக்க வைப்பார்களா?'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications