அம்மாவின் புடவையை உருவி.. பாவாடையுடன் நிற்க வைத்து.. கழுத்தை "இறுக்கிய" மகன்.. அந்தம்மா கதறல்.. ஐயோ
ஹைதராபாத்: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி, ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. தெலங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ளது ஷாத்நகர்.. இங்கு சுகுணம்மா என்ற நடுத்தர பெண்மணி ஒருவர் தன்னுடைய மகன் சிவகுமாருடன் வசித்து வருகிறார்.. இந்த மகனுக்கு 20வயதுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.. இவர் சம்பவத்தன்று தன்னுடைய அம்மாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்..

பணம்: தன்னிடம் பணம் இல்லை என்று அம்மா சொன்னதால், ஆத்திரமடைந்த மகன், பெற்ற தாயை கொடூரமாக தாக்கியிருக்கிறார்.. ஆவேசம் அடங்காமல், அம்மாவின் புடவையை உருவி, அவரது கழுத்தையும் நெரித்தே கொன்றுள்ளார்.. இந்த சம்பவம் அவரது வீட்டிற்குள்ளேயே நடந்துள்ளது.. அப்போது, அங்கிருப்பவர்கள் மகனுக்கு தெரியாமல், தங்கள் செல்போனில் இதை வீடியோவாக எடுத்துள்ளதாக தெரிகிறது.
பிறகு திடீரென இந்த வீடியோ, வாட்ஸ் ஆப்-களில் வேகமாக பரவ தொடங்கிவிட்டது.. இதைப்பார்த்த பலரும் பதறிப்போய்விட்டர்.. அந்த வீடியோவில், அம்மாவின் புடவையை உருவி, தாக்குகிறார் மகன்.. வலி தாங்க முடியாமல் அந்தம்மா கதறுகிறார்..
புடவை இல்லாமல் வெறும் உள்பாவாடையுடன் நிற்கும் அம்மாவின் கழுத்தை பிடித்து, அவரது குரல் வளையை நெரிக்கிறார் மகன்.. இதன் உச்சக்கட்டமாக, அந்த புடவையை உருவி, அவரது கழுத்தில் பல சுற்றுகள் சுற்றி, பிறகு, இறுக்கி கொல்கிறார். அந்த அம்மா அப்படியே சரிந்து விழுகிறது.. இந்த வீடியோவை சகிக்க முடியாமல் பலர், "தயவுசெய்து இந்த வீடியோவை நீக்கிவிடுங்கள், இளகிய மனம் படைத்தவர்கள் யாரும் இந்த வீடியோவை பார்க்காதீங்க" என்று கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.
வேடிக்கை : தாயை மகன் தாக்கி கொல்லும்போது, அங்கிருந்த யாருமே மகனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. மகனுக்கு தெரியாமல், இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் நபர், கடைசி நேரத்தில் சுதாரித்து தடுக்க முயல்கிறார். ஆனால் அதற்குள் அந்தம்மா சுருண்டு விழுந்துவிடுகிறார்..

எப்போதுமே அம்மாவை பணம் கேட்டு சிவக்குமார் மிரட்டுவாராம்.. பணம் தராமல் போனால் மிருகத்தனமாக தாக்குவாராம்.. ஒவ்வொருமுறையும் பயமுறுத்தியே பணத்தை பிடுங்கி கொண்டுபோவாராம்.
கதறல்: பெற்ற தாயை மகன் கொடூரமாக கொன்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.. இதனால், சம்பவ இடத்துக்கு நேரடியாக போலீஸார் சென்றிருக்கிறார்கள்.. அப்போது, யாருக்குமே தெரியாமல், அம்மாவின் சடலத்தை வைத்து, இறுதி சடங்குக்கு மகன் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாராம்.. போலீசார் அங்கு போய் நின்றதுமே, மகனுக்கு வெலவெலத்து போய்விட்டது..
உடனே போலீசாரை பார்த்ததும், தன்னுடைய அம்மா உடம்பு சரியில்லால் இறந்துவிட்டார் என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொன்னாராம். அப்பறமென்ன? மகனை அள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள் போலீசார். விசாரணையும் நடந்து வருகிறது. இதனிடையே, இணையத்தில் காண்போரை கலங்கடித்து ஈரக்குலையையே நடுங்கவைத்து கொண்டிருக்கிறது அந்த கொடூர வீடியோ.












Click it and Unblock the Notifications