பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயமில்லை.. அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கிய தெலங்கானா அரசு
ஹைதாபாத்: கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து தெலங்கானா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, உலகின் அனைத்து நாடுகளையும் அலறவிட்டது. இதுவரை எந்தவொரு நாடும் கொரோனா வைரசை முழுமையாக அழிக்க முடியவில்லை.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கட்டுக்குள் வைப்பதில் உலக நாடுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின், இப்போது தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது.

கொரோனா
குறிப்பாக, உலகெங்கும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு கொரோனா வேக்சின் பணிகள் காரணமாகத் தீவிர பாதிப்பும் உயிரிழப்பும் வெகுவாக கட்டுக்குள் வந்தது. இதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பு குறைந்ததால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே மாஸ்க் அணிவது போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது.

குறையும் கொரோனா
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 2020இல் கொரோனா பரவல் தொடங்கிய உடனேயே நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது இடங்களுக்குச் செல்ல 2 டோஸ் தடுப்பூசி, மாஸ்க் உள்ளிட்டவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டன. கிட்டதட்ட நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொது இடங்களுக்குச் செல்ல மாஸ்க் கட்டாயம் என்ற விதி உள்ளது. இப்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் மகாராஷ்டிரா அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

தெலங்கானா
இதற்கிடையே தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கேஸ்கள் குறைந்து வருவதால், மாஸ்க்குகள் அணிவது கட்டாயம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க தெலங்கானா அரசு இன்று முடிவு செய்துள்ளது. வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர மற்ற அனைவருக்கும் மாஸ்க் அணிவது என்பது கட்டாயமில்லை என்றும் அவர்களின் சுயவிருப்பத்தின் பெயரில் பின்பற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் நீக்கம்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், தினமும் 50க்கும் குறைவான வழக்குகள் பதிவாகி வருவதாகவும் மாநில பொதுச் சுகாதார மாநில இயக்குநர் ஜி ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். இதன் காரணமாகவே தெலங்கானாவில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கியது குறிப்பிடத்தக்கது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications