28 ஏக்கர்.. 655 அறைகளுடன் தெலுங்கானா புதிய தலைமை செயலகம்.. பிரம்மிப்புடன் பார்த்து செல்லும் மக்கள்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் புதிய தலைமை செயலகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில முதல்வர் திறந்து வைத்தார். இந்த தலைமை செயலகம் 28 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. புதிய தலைமை செயலகத்திற்கு இந்தியன் க்ரீன் பீல்டிங் கவுன்சில் 'கோல்டு' ரேட்டிங் வழங்கியும் சிறப்பித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக கடந்த 2014 ஆம் ஆண்டு உருவானது. பழைய தலைமை செயலகத்தில் கார் பார்க்கிங் உள்பட போதுமான வசதிகள் இல்லதாதாலும் புதிய தலைமை செயலகம் கட்ட தெலுங்கான அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரி அருகே ஏற்கனவே தலைமை செயலகம் அமைந்திருந்த பகுதியிலேயே கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. 4 ஆண்டுகளாக தெலுங்கானா புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இந்த தலைமை செயலகத்தின் கட்டுமான பணிகள் முடிந்தது.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய தலைமை செயலக கட்டிடத்தை மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். இந்த புதிய தலைமை செயலகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை செயலகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைமை செயலகம் 28 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 655 அறைகள், 30 மாநாட்டு அரங்குகளுடன் இந்த தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளுக்காக 8 ஆயிரம் டன் இரும்பு 60 ஆயிரம் கன மீட்டர் சிமென்ட், 11 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. புதிய தலைமை செயலகத்தை திறந்து வைத்த பிறகு நேற்று அங்கிருந்தபடி பணிகளை சந்திரசேகர் ராவ் தொடங்கினர். தெலுங்கானா தலைமை செயலகத்தை மக்கள் பிரம்மிப்புடன் பார்த்து செல்கின்றனர். பலரும் தலைமை செயலக கட்டிடம் முன்பாக செல்பி எடுத்துக் கொண்டதையும் காண முடிகிறது.

இதற்கிடையே, தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலகத்திற்கு இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் 'கோல்டு' ரேட்டிங் வழங்கி சிறப்பித்துள்ளது. IGBC பசுமை புதிய கட்டிட மதிப்பீட்டு முறையின் கீழ் இந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தெலுங்கானாவின் சாலை மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் வெமுலா பிரசாத் ரெட்டி கூறுகையில், " பசுமை நிலைத்தன்மையில்(green sustainability) பல்வேறு அம்சங்கள் என்ற மைல் கல்லை எட்டிய நாட்டின் முதன் தலைமை செயலகம் இதுதான் என்று கூறினார்.
#WATCH | Supporters of NCP chief Sharad Pawar protest against his announcement to step down as the national president of NCP. pic.twitter.com/LsCV601EYs
— ANI (@ANI) May 2, 2023
இந்த புதிய தலைமை செயலகத்தில், பசுமையான நடைபாதைகள், 100 சதவிகிதம் எல்.இ.டி விளக்குகள், சுற்றுசூழலுக்கு உகந்த வகையிலான ஏசி அமைப்புகள், காற்றோட்டமான இடம் என பல வசதிகளுடன் IGBC தரநிலைகளுக்கு ஏற்ற படி பல்வேறு பசுமை அம்சங்களை கொண்டதாக புதிய தலைமை செயலக வளாகம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications