கேசிஆர் கோட்டை காலி! தெலுங்கானாவில் காங்கிரசுக்கு போகும் ஓபிசி வாக்குகள்- ஏன்! பாஜக நிலை ரொம்ப பாவம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே மாநிலத்தில் எந்த சமூகத்தினர் யாருக்கு வாக்களிக்க அதிகம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், இந்த நிலை தெலுங்கானாவில் மாற வாய்ப்புகள் அதிகம். இது தொடர்பா லோக்பால் அமைப்பின் சர்வேயில் என்ன கூறப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
இதற்கிடையே தெலுங்கானா உட்பட 5 மாநிலங்களில் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானாவில் ஒரே கட்டமாக வரும் நவ.30ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச.3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் மேஜர் பிரச்சினைகள், அங்கு எந்த பிரிவினர் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் நாம் பார்க்கலாம்.
தெலுங்கானா: தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே வேலையின்மை தான் இளைஞர்கள் மத்தியில் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.. இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் கேசிஆர் அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவே தெலுங்கானா இளைஞர்கள் கருதுவதாக லோக்போல் அமைப்பின் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மட்டுமின்றி விவசாயிகளும் கூட தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள கேசிஆர் அரசின் மீது கடும் கோபத்திலேயே இருக்கிறார்களாம். நீர்ப் பாசனம், தங்கு தடையற்ற மின்சார சப்ளை எனத் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை கேசிஆர் அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளும் கேசிஆர் கட்சிக்கு எதிராகவே திரும்பியுள்ளனர்.
காங்கிரஸ்: தெலுங்கானாவில் காங்கிரஸ் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி ரேவந்த் ரெட்டி அங்கே மாநிலம் முழுக்க இறங்கி பிரசாரம் செய்து வருகிறார். இது தேர்தல் களத்திலும் எதிரொலிப்பதாக லோக் பால் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சாதியினர் மத்தியிலும் காங்கிரஸ் வாக்கு வங்கி கணிசமாகவே அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக இப்போது சிறுபான்மையினர் முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துவிட்டுள்ளதாக லோக்பால் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மேலும், காலம் காலமாகக் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாக்குகளையும் காங்கிரஸ் தக்க வைப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவு: மேலும், பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் பிஆர்எஸ் எந்தவொரு முக்கிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதுவும் கூட பிஆர்எஸ் கட்சிக்குப் பாதகமாக அமைகிறது. இதனால் பிஆர்எஸ் கட்சியின் முக்கிய வங்கு வங்கியான பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு கணிசமாக அதிகரிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாகக் காங்கிரஸ் கடந்த மாதம் ஹைதராபாத்தில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியது. அப்போது கர்நாடக தேர்தலைப் போலவே அங்கும் 6 முக்கிய வாக்குறுதிகளைக் காங்கிரஸ் முன்வைத்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அந்த லோக்பால் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவை பொறுத்தவரை அவர்கள் தேர்தல் ரேஸிலேயே இல்லை. தெலுங்கானாவில் இந்தத் தேர்தல் என்பது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட இடையே தான். கடந்த சட்டசபைத் தேர்தலைக் காட்டிலும் பாஜகவுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் கூட அது பெரியளவில் பலன் தராது எனக் கூறப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications