500+ நாய்கள் விஷ ஊசி போட்டு கொலை.. ஒரே நிமிடத்தில் சுருண்டு விழுந்து அடுத்தடுத்து உயிரிழப்பு! பகீர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நாய்களை ஒழிக்கிறேன் எனச் சொல்லி சுமார் 500+ நாய்களைக் கொன்றுள்ளனர். ஆபத்தான விஷத்தை நாய்களுக்குச் செலுத்தி இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இது தேசியளவில் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தெருநாய் பிரச்சினை பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம் சிலர் நாய்களை அகற்றுகிறேன் எனச் சொல்லி மிக மோசமான கொடூரமான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

500+ நாய்கள்
அங்குச் சமீபத்தில் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடந்த நிலையில், வேட்பாளர்கள் நாய்கள் இல்லாத கிராமத்தை உருவாக்குவோம் என வாக்குறுதியை முன்வைத்ததாக தெரிகிறது. தேர்தலில் வென்ற அவர்கள், நாய்களை அகற்ற இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இரண்டு வாரங்களில் சுமார் 500+ நாய்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர்.
இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தெலுங்கானா போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஹனம்கொண்டா மற்றும் காமரெட்டி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு கிராமத் தலைவர்கள் உட்பட மொத்தம் 15 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் இருந்து இரண்டு வாரங்களிலேயே குறைந்தது 500 நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் விலங்குகள் மீதான வன்முறைக்கு எதிரான மிகப் பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கொடூரம்
இந்தக் கொடூரச் செயலில் உயிருக்கு ஆபத்தான விஷயத்தை நாய்களுக்குச் செலுத்துகிறார்கள். நாய்கள் ஓரிரு நிமிடங்களில் உடனடியாக உயிரிழந்துள்ளன. ஜக்தியால் மாவட்டத்தில் நாய்கள் கொல்லப்படுவது குறித்த வீடியோ ஒன்று வெளியானது. அதில் ஒருவர் நாய்க்கு விஷ ஊசி செலுத்துவதும், ஒரு நிமிடத்திற்குள் நாய் பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழப்பதும் பதிவாகியுள்ளது. அதே தெருவில் மேலும் இரண்டு நாய்களின் சடலங்களும் கிடந்தன. இந்த நகராட்சியில் மட்டும் சுமார் 50 நாய்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல ஹனம்கொண்டாவில் உள்ள சியம்பேட்டாவில் சட்டத்திற்குப் புறம்பாக 110 நாய்கள் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், அதன் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக போலீசார் உறுதி செய்தனர். மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியச் சில நாய்களுக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
இந்தக் கொடூரமான சம்பவத்துக்குக் காரணமான 15 பேரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஷயம்பேட்டை, ஆரேபள்ளி மற்றும் பல்வஞ்சா பகுதிகளைச் சேர்ந்த ஏழு உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்களே, நாய்களைக் கொல்ல உத்தரவிட்டதாகத் தெரிகிறது. அதன்படி கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் நாய்களைக் கொல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. விஷ ஊசிகள் மற்றும் விஷம் கலந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி நாய்களைக் கொலை செய்துள்ளனர்.
மர்ம விஷ ஊசிகளை நாய்களுக்குச் செலுத்தி, அவற்றை ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் தூக்கி எறிந்துள்ளனர். இது தொடர்பாக 15 பேர் மீது BNS பிரிவு 325, விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை தீவிரம்
சில ஜூனியர் ஊழியர்கள் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிமுறைகள் எங்களுக்குத் தெரியாது என்று சிலர் சொல்கிறார்கள் அதை எல்லாம் ஏற்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், என்ன விஷத்தைப் பயன்படுத்தினர் என்பதைக் கண்டறியவும் முயற்சிகள் நடக்கிறது. சட்டவிரோத கெமிக்கல்களை பயன்படுத்தினால் அதற்கேற்பக் கூடுதல் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
டிரம்பை போலவே .. விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய பிரிட்டன்.. இந்தியாவுக்கு தான் மிக பெரிய சிக்கல் -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு!












Click it and Unblock the Notifications