தமிழ்நாட்டை ஃபாலோ பண்ணும் தெலங்கானா! இலவச பேருந்து பயண திட்டம்.. இன்று முதல் அமல்! அசத்தும் காங்கிரஸ்
ஹைதராபாத்: தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், இன்று முதல் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருக்கிறார்.
தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டபோது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதில் 6 வாக்குறுதிகள் மிக முக்கியமானதாக இருந்தது. அதாவது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வீடு இல்லாதவர்களுக்கு 250 சதுர அடியில் வீட்டு மனை, வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதியுதவி, ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் போன்றவை விநியோகிக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி அம்மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 64 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைமையிலான தெலங்கானா அரசு நிறைவேற்ற தொடங்கியுள்ளது. அதன்படி இன்று மகாலட்சுமி திட்டமான மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் இன்று அமல்படுத்தப்படுகிறது.
இன்று சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. இதன்படி இனி தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TSRTC) பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணித்துக்கொள்ளலாம். மாநகர பேருந்து, நகர பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்து என அனைத்துக்கும் இந்த சலுகை பொருந்தும். இந்த பேருந்துகள் மற்ற மாநிலத்திற்கு செல்லும் நிலையில், மாநில எல்லைவரை இலவசமாகவும், அடுத்த மாநிலத்திற்கு நுழைந்த பின்னர் அங்கிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கான கட்டண தொகையை அரசு, தெலங்கானா மாநில போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கும். இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில போக்குவரத்து கழக முதன்மைச் செயலாளர் ஏ.வாணி பிரசாத் உத்தரவை வெளியிட்டிருக்கிறார். இந்த திட்டத்தை இன்று மதியம் 1.30 மணியளவில் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications