பாஜகவினரை ஓட ஓட விரட்டிய டிஆர்எஸ்.. தெலுங்கானாவில் மோடியை எதிர்த்து பெரும் போராட்டம்.. பரபரப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியை தொலைநோக்கு பார்வை இல்லாதவர் என்றும், பாஜகவை கடலில் தூக்கி வீச வேண்டும் என்றும் சந்திசேகர ராவ் சமீபத்தில் குறிப்பிட்டார்.
அதேபோல் பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். மேலும் தெலுங்கானாவிற்கு சமீபத்தில் ராமானுஜர் சிலையையே திறக்க வந்த பிரதமர் மோடியை சந்திசேகர ராவ் விமான நிலையத்தில் வரவேற்காமல் தவிர்த்தார்.

சந்திரசேகர ராவ்
இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலம் உருவானது பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்துக்கள் சந்திசேகர ராவ் மற்றும் அவரின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் இடையே கோபத்தை உண்டாக்கி உள்ளது. ராஜ்ய சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதாவில் பேசிய பிரதமர் மோடி, தெலுங்கானா மாநிலம் உருவானதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் தெலுங்கானா மாநிலம் முறையாக உருவாக்கப்படவில்லை.

தெலுங்கானா மோடி
2014ல் இந்த மசோதா எந்த விதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்களின் மைக் ஆப் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை. முறையான விவாதம் நடந்து இருந்தால் நன்றாக இருக்கும். இதனால் இப்போதும் கூட ஆந்திரா, தெலுங்கானா இடையே மோதல், கசப்பு நிலவி வருகிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு டிஆர்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டிஆர்எஸ் எதிர்ப்பு
இது தொடர்பாகே கருத்து தெரிவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடி தெலுங்கானா மக்களை அவமதித்து விட்டார். எங்களின் போராட்டத்தை அவர் அவமதித்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி பேசியது அவமானகரமான ஒன்று. எங்களின் பல ஆண்டு கஷ்டத்தை, தியாகத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார். அவரின் பேச்சுக்கு கண்டனம் என்று சந்திரசேகர ராவின் மகன் கேடி ராமா ராவ் விமர்சனம்செய்துள்ளார் .

போராட்டம்
இந்த நிலையில்தான் நேற்று தெலுங்கானா முழுக்க பிரதமர் மோடிக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வந்தது. நேற்று தெலுங்கானா முழுக்க பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடந்தது. அதேபோல் இன்னும் சில இடங்களில் வித்தியாசமான சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோல் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடியை பறக்க விட்டு டிஆர்எஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர் .

காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் கட்சியும் இந்த போராட்டத்தை மேற்கொண்டது. முக்கியமாக தெலுங்கானா எல்லை பகுதிகளில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. பல இடங்களில் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் தீவிரமாக நடந்தது. தெலுங்கானா மக்களின் போராட்டத்தை பிரதமர் மோடி அவமதித்து விட்டார். அவர் எங்களை மதிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்தின.

டிஆர்எஸ்
இந்த நிலையில் வாரங்கல் பகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தை நடத்திய போது அங்கு வந்த பாஜகவினர் டிஆர்எஸ் கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். காவி துண்டு, பாஜக கொடியோடு வந்த பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். இதை பார்த்ததும் ஒன்று திரண்ட டிஆர்எஸ் கட்சியினர் குச்சிகளை வைத்து பாஜகவினரை அடித்தனர்.

வைரல்
பாஜகவினரை தொடர்ந்து குச்சியால் தாக்கி ஓட ஓட அவர்களை விரட்டி அடித்தனர். இதில் பாஜகவினர் சிலரின் கைகள் முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இன்னும் பல இடங்களில் பாஜகவினர் இதேபோன்ற தாக்குதல்களுக்கு உள்ளானார்கள் . இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications