Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணம் முடிந்த 2 நாளில் வெளிவந்த குட்டு.. கணவருக்கு உண்மை தெரிந்ததும் இரவோடு இரவாக எஸ்கேப் ஆன பெண்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஏற்கனவே பலரை திருமணம் செய்து மோசடி செய்ததாக கூறப்படும் இளம்பெண் ஒருவர், 31 வயது இளைஞரை திருமணம் செய்துவிட்டு, உண்மை வெளிவந்ததும் இரண்டே நாளில் நகை பணத்துடன் இரவோடு இரவாக ஓட்டம் பிடித்துள்ளார். இதை வெளியில் சொன்னால் அவமானம் எனக் கருதிய புது மாப்பிள்ளை வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்த பிறகே அவருக்கு மனைவி குறித்த திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது.

தற்போதைய கால காட்டத்தில் மோசடிகள் விதவிதமாக நடக்கின்றன. இப்படியெல்லாம் கூட மோசடிகள் நடக்குமா? என கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு மோசடியானது நடைபெறுகிறது. சொந்தக்காரர்களை நம்ப வைத்து மோசடிகள் நடப்பதை பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் திருமணம் செய்து மோசடி செய்யும் நிகழ்வுகளும் சமீப காலமாக அடிக்கடி நடப்பதை பார்க்க முடிகிறது.

Marriage fraud Andhra Pradesh

திருமண வரன் தேடி

மேட்ரிமோனியல் இணையதளங்களில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்க்ளை குறிவைத்து ஆண், பெண் பேதமின்றி இதுபோன்ற திருமண மோசடிகளும் நடைபெறுகின்றன. மோசடிக்காகவே திருமணம் செய்யும் பகீர் சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பதை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் ஆந்திராவை அதிரை வைத்து இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வர் ராவ் (பெயர் மாற்றப்பட்டுளாது). 31 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். திருமணத்திற்காக தகவல் மையம் மூலமாகவும் சொந்தக்காரர்களிடம் சொல்லி வைத்தும் தீவிரமாக பெண் தேடி வந்து இருக்கிறார். சமீபத்தில் இருவருக்கு பத்ராத்திரி, கொத்தகுடேமை சேர்ந்த தேவிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண்ணின் விவரங்கள் கிடைத்துள்ளது.

பிரமாண்டமாக திருமணம்

உடனே அவரை தொடர்பு கொண்ட தேவேந்திர ராவ், திருமணத்திற்கு பெண் தேடி வருவது பற்றி பேசியிருக்கிறார். அவரிடம் இனிக்க இனிக்க தேவிகா பேசியுள்ளார். தேவிகாவின் வார்த்தைகளில் மயங்கிய வெங்கடேஷ்வர் ராவ், அவரது காதல் வலையில் வீழ்ந்தார். தொடர்ந்து செல்போனில் பேசிய வெங்கடேஷ்வர் ராவ், இந்திராவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து, திருமண தேதி குறிக்கப்பட்டு, பத்திரிகை அடித்து வெகு விமர்சையாக கடந்த மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. தடல்புடலாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர்கள், மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு சென்றனர். 90 கிட்ஸ் திருமணம் என்பதால் ஊரே வியக்கும் அளவிற்கு பிரமாண்டமாக திருமணத்தை நடத்தியிருக்கிறார் வெங்கடேஷ்வர் ராவ்.

2 நாட்களில் சந்தேகம்

மணப்பெண் வீட்டில் மணமகள் தேவிகாவின் தாயார் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து தேவிகாவின் தாயார் லட்சுமியிடம் மாப்பிள்ளை வீட்டினர் கேட்டு இருக்கிறார்கள். ஏதோஏதோ காரணம் கூறி சமாளித்து இருக்கிறார் தாய் லட்சுமி. ஒருவழியாக திருமணம் முடிந்த நிலையில், இனி வாழ்வில் வசந்த காலம் வந்துவிட்டது என பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கிய வெங்கடேஷ்வர ராவுக்கு, 2 நாட்களில் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தேவிகாவின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது தேவேந்திர ராவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, தேவிகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை உள்ளதாக தெரியவந்தது. இதை அறிந்த வெங்கடேஷ்வர் ராவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே, இதுபற்றி தேவிகாவிடம் கேட்டு இருக்கிறார்.

நகை, பணத்துடன் மாயம்

அப்பொது,, "திருமணம் மற்றும் குழந்தை இருப்பது உண்மைதான், ஆனால் தற்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டேன்" எனக்கூறி சமாளித்துள்ளர். இதனால் கணவன் - மனைவி இடையே தகாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்த 8½ பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்துடன் இரவோடு இரவாக இந்திரா ஓட்டம் பிடித்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் எனக்கருதிய வெங்கடேஷ்வர் ராவ், யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்து இருக்கிறார். இதற்கிடையே, தேவிகா நீண்ட நாட்களாக வீட்டில் இல்லாததால் அவரது உறவினர்கள் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது நடந்த உண்மைகளை வெங்கடேஷ்வர் ராவ் கூறினார்.

இதையடுத்து போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், தேவிகா ஏற்கனவே இதேபோல் பலரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்துடன் தலைமறைவானது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக தேவிகாவை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் கைதான பிறகே, நடந்த உண்மையான சம்பவம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+