சாம்பார் சாதம் கணவனுக்கு.. குழந்தைகளுக்கு தயிர் சாதம்.. ஆடிப்போன தெலுங்கானா.. அப்படி என்னாச்சு
ஹைதராபாத்: புரிதல் இல்லாத ஒரே காரணத்துக்காக, அநியாயமாக உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன.. குறிப்பாக இளம் தம்பதிகளிடம் இப்படியான புரிதல் இல்லாததால் விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த துயரம் ஒன்று, பொதுமக்களிடையே வருத்தத்தையும், கலக்கத்தையும் தந்து வருகிறது.
சமீப காலமாகவே, குடும்ப வன்முறைகளும் பெருகி வருகின்றன. குடும்ப உறவுகள் வலுப்பட வேண்டும் என்பதற்காக, தம்பதியின ஒற்றுமை, குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் நீதிமன்றங்கள் அதிக மிகுந்த அக்கறையை செலுத்துகிறது என்றாலும், உறவுகள் சிதைந்து, உயிர்களும் பிரியும் நிலைமை வந்துவிடுகிறது.
இதோ தெலங்கானா மாநிலத்திலும் ஒரு துயரம் நடந்துள்ளது.. சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள ராகவேந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் சென்னைய்யா. இவரது மனைவி பெயர் ரஜிதா.

குடும்ப தகராறு
இவர்களுக்கு சாய்கிருஷ்ணா(12), கவுதம்(8), மகள் மதுபிரியா(10) என்று 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.. சமீப காலமாகவே தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறும், பிரச்சனையும் ஏற்பட்டு வந்துள்ளது. தினம் தினம் சண்டையால் மனம் நொந்துபோன ரஜிதா, பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்வதென்று முடிவு செயதார்..
இதற்காக சென்னைய்யாவுக்கு சாம்பார் சாதம் சமைத்து தந்திருக்கிறார்.. பிறகு, ரஜிதா குழந்தைகளுக்கு தயிர் சாதம் கலந்தார். அதில், விஷத்தையும் கலந்து தந்ததாக தெரிகிறது. இதே தயிர் சாதத்தை ரஜிதாவும் சாப்பிட்டார்.. குழந்தைகளுக்கு தயிர் சாதம் ஊட்டியதுமே, சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் அடைந்தனர். ரஜிதாவும் மயங்கி விழுந்தார்.
திடீரென நேர்ந்த துயரம்
இதைப்பார்த்து பதறிப்போன சென்னையா, உடனடியாக 4 பேரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்தார். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அந்த 3 குழந்தைகளும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.. இப்போது ரஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், 3 குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். ரஜிதாவிடம் இதுகுறித்த விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
