தக்காளி ரேட்டை விட சிக்கன் விலை குறைந்த பரிதாபம்.. தலையில் அடித்துக்கொண்ட ஹைதராபாத் மக்கள்
ஹைதராபாத்: தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்திலும் தக்காளியின் விலை உச்சம் தொட்டிருந்த நிலையில், ஒருவழியாக இன்று சிக்கனை விட ஒரு கிலோ தக்காளியின் விலை குறைவாக விற்கப்படுகிறது.
தொடர் மழை, விளைச்சல் பாதிப்பு, இதனால் வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக சிக்கன் ஒரு கிலோ எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறதோ அதைவிட அதிகமான விலைக்கு தக்காளி விற்கப்பட்டது. பிறகு கோழி இறைச்சியின் விலையும் உயர்ந்தது. இப்படியாக போட்டிப்போட்டுக்கொண்டு தக்காளி ஒருபுறமும் கோழி இறைச்சி மறுபுறமும் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஒரு கிலோ சிக்கன் ரூ.320க்கு விற்பனையானது.

இந்நிலையில் மார்கெட்டுக்கு வரத்து ஓரளவுக்கு சீராக இருந்ததால் தக்காளி விலை ரூ.150லிருந்து ரூ.75ஆக குறைந்தது. கடைகளில் ரூ.100 என விற்கப்பட்டாலும், உழவர் சந்தையில் ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்பார்க்காத இந்த விலை குறைவால் மக்கள் உழவர் சந்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். தக்காளி விலையே குறைஞ்சு போச்சு இனி சிக்கன் விலை குறையவில்லையெனில் விற்பனையாகாது என்பதை உணர்ந்த விநியோகஸ்தர்கள் ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.200க்கு விற்பனை செய்ய தொடங்கினர்.
ஞாயிற்று கிழமைகளில் ரூ.220க்கும் மற்ற நாட்களில் ரூ.200க்கும் சிக்கன் விற்பனையாகிறது. ஒரேயடியாக ரூ.120 குறைந்ததால் மக்கள் சிக்கன் கடைகளில் முந்தியடித்துக்கொண்டு கறி வாங்கி வருகின்றனர். இதுவே சில்லறை கடைகளில் ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல உயிருள்ள கோழி கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளை பொருத்த அளவில், கருவேப்பிலை, கேரட், பருப்பு வகைகள் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும், அவரை, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையானது குறையாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எப்படியாயினும் அன்றாடம் கூலி தொழில் செய்பவர்கள் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் காய்கறி வாங்குவது இயலாமல் போயுள்ளது. இந்நிலை மாறும்போதுதான் சாமானிய மக்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். என்னதான் தக்காளி விலை அதிகமாக இருந்தாலும், விவசாயிகள் இதன் மூலம் பலனடைவதில்லை என்றும், இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்கள்தான் பயனடைகிறார்கள் எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications