தெலுங்கானாவில் திருநங்கையை கத்தியால் குத்திய இளைஞர்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் காதலை ஏற்காத திருநங்கையை கத்தியால் குத்திய இளைஞர் தலைமறைவாகிவிட்டார். அவரது வீடியோ ஆதாரங்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் திருநங்கைகள் தங்கி உள்ள பகுதிக்கு அவ்வப்போது வந்துக் கொண்டிருந்தவர் அப்பு என்னும் இளைஞர். இவர் திருநங்கை சாய் பிரியா என்பவரை காதலிப்பதாக கூறி இரண்டு மாதங்களாக அவர் பின்னால் சுற்றியதாக தெரிகிறது.

ஆனால் அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை என சொல்லப்படுகிறது. இப்படியே பதில் சொல்லாமல் சாய் ப்ரியா, காலம் தாழ்த்தி வந்த நிலையில் ஆத்திரமடைந்த அப்பு நேற்றைய தினம் சாய் ப்ரியா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார்.
அங்கு அவரிடம் தனது காதலை ஏற்குமாறு கேட்டார். அதற்கு சாய் பிரியா மறுத்தார். உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சாய்பிரியாவை சக திருநங்கைகள் மீட்டு வாரங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் போலிசிலில் புகார் அளிக்கப்பட்டது. அப்பு, திருநங்கை சாய் ப்ரியாவை தாக்கும் வீடியோ காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருந்ததால் அந்த வீடியோ ஆதாரங்கள் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சக திருநங்கையர்களிடம் விசாரணை நடத்தியதில் சாய்பிரியாவும் அப்புவும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பு மற்றொரு திருநங்கையருடனும் பழகியுள்ளதாகவும் இதுகுறித்து சாய்பிரியாவுக்கு தெரியவந்ததாகவும் அப்போது நடந்த வாக்குவாதத்தின் போது அப்பு கத்தியால் குத்தியதாகவும் கூறுகிறார்கள். எனவே கைது செய்யப்பட்ட அப்புவிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications