BC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு.. டெல்லி நோக்கி 1000 கார்களில் பேரணி.. டிஆர்எஸ் கவிதா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் சரூர் நகரில் நடைபெற்ற 'சாமாஜிக நியாய தெலங்கானா சங்கல்ப சபா' மாநாட்டில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் திரண்டு இடஒதுக்கீட்டிற்காக போராட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கல்வகுண்ட்லா கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த மாநாட்டில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பிசி) 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி தேசிய அளவிலான இயக்கம் தொடங்கப்பட்டது.

TRS Kavitha Demands 50 BC Reservation Issues Chalo Delhi Warning to Centre

பிறப்பு என் கையில் இல்லை, ஆனால் போராட்டம் என் கையில்

மாநாட்டில் திரண்டிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் பேசிய கல்வகுண்ட்லா கவிதா, தனக்கு எதிரான அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்..

"நான் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பேசும்போது, சிலர் என் பின்னணியைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்கிறார்கள். அவர்களுக்கு நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.. நான் எந்தக் குடும்பத்தில் பிறந்தேன் என்பது என் கையில் இல்லை. ஆனால், யாருக்காக என் வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டும், யாருக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முற்றிலும் என் கையில் மட்டுமே உள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்தின் வாசல்படியைக் கூட மிதிக்காத சமூகங்களின் கடைசி மனிதனும் அதிகாரம் பெறும் வரை என் வாழ்நாளை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்."

தனது மனசாட்சிக்கு விரோதமாக எந்தச் செயலையும் செய்யப்போவதில்லை என்று உறுதியளித்த அவர், சமூக, ஜாதி மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற முழு நம்பிக்கையோடு களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

சமூக நீதியும் வரலாற்றுப் பாடமும்

நாட்டின் வளங்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதே உண்மையான சமூக நீதி என்று பேசிய கவிதா, ஒரு எளிய உதாரணத்தைக் கூறினார்.. 100 பேருக்கு 100 ரொட்டிகள் இருக்கும்போது, 10 பேர் மட்டும் 90 ரொட்டிகளைச் சாப்பிடுவது மிகப்பெரிய அநீதி. 100 ரொட்டிகளும் 100 பேருக்கும் போய்ச்சேர்வதே உண்மையான நீதி. ஆனால், நமது நாட்டில் இன்று 10 சதவீதத்தினர் நாட்டின் 90 சதவீத வளங்களை அனுபவிக்கிறார்கள்.. பெரும்பான்மையான மக்கள் பசியோடு தவிக்கிறார்கள்,என்றார் .

கௌதம புத்தர், ராஜர்ஷி ஷாஹு மகாராஜ், மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மற்றும் 69% இடஒதுக்கீட்டை அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்த்துப் பாதுகாத்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தங்கள் சுயநலத்தைக் கடந்து சமூக நீதிக்காகப் போராடியதை அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசுக்கு கெடு

தெலங்கானா மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட 42% பிசி இடஒதுக்கீடு மசோதா மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய கவிதா, மத்திய அரசு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் சட்டமன்றங்களில் பிசி சமூகத்திற்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்தார்.

மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றத் தவறினால், ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி 1,000 கார்களுடன் சலோ டெல்லி என்ற பிரம்மாண்டப் பேரணியை நடத்துவோம். டெல்லி அதிகார வர்க்கத்தை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குப் பணிய வைப்போம் என எச்சரித்தார். மேலும், தெலங்கானா இயக்கத்தின் வழிகாட்டியான பேராசிரியர் ஜெயசங்கரின் கனவான சமூநீதி தெலங்கானாவை உருவாக்குவதே தங்கள் முதன்மை இலக்கு என்றார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்கள்:

1. 50% பிசி இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி தேசிய இயக்கம் நடத்துதல்.
2. பாரத ரத்னா கோரிக்கை: சமூக சீர்திருத்தவாதிகள் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே தம்பதியருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கக் கோருதல்.
3. பேராசிரியர் ஜெயசங்கர் கௌரவம்: டேங்க் பண்ட் பகுதியில் பேராசிரியர் ஜெயசங்கர் சிலை அமைப்பதுடன், அவருக்கு 'பத்ம விபூஷண்' விருது வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தல்.
4. எஸ்சி/எஸ்டி நிதி பாதுகாப்பு: ஒதுக்கீடு செய்யப்படும் எஸ்சி/எஸ்டி நிதியை முழுமையாக அந்த சமூகங்களின் நலனுக்கே செலவிடுதலை உறுதிசெய்தல்.
5. பணியிடங்கள்: மத்திய, மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள எஸ்சி/எஸ்டி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல்.

6. ஆதிவாசி உரிமைகள்: ஆதிவாசி மக்களுக்கு முழுமையான வன உரிமைகளை வழங்குதல்.
7. 33% மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறைக்குக் காத்திருக்காமல் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துதல்.
8. வக்ஃப் வாரிய பாதுகாப்பு: வக்ஃப் சொத்துகளைப் பாதுகாத்து, முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்.
9. சிறுபான்மையினர் நலன்: சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு அமைப்புகளை உருவாக்குதல்.
10. திருநங்கையர் உரிமைகள்: திருநங்கைகளுக்கு முழுமையான அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்குதல்.
11. மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்துவதுடன் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+