தென்னிந்தியாவுக்கு வரும் டிரம்ப் சொகுசு வீடுகள்.. ஒரு வீட்டின் விலையே ரூ.60 கோடி.. மெகா பிரம்மாண்டம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய பிரம்மாண்ட குடியிருப்பு திட்டம் ஒன்று களமிறங்க உள்ளது. கோகாபேட்டில் உள்ள கோல்டன் மைல் ரோட்டில் உருவாகும் அமெரிக்க அதிபரான டிரம்ப் பெயரில் டிரம்ப் டவர்ஸ் ஹைதராபாத் திட்டம் வருகிறது. பிரம்மாண்டமாக அமையும் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.4,200 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் ஏற்கனவே ஹைதராபாத்தில் ஒரு சாலை இருக்கிறது. அங்குள்ள பைனாஸியல் சிட்டியில் உள்ள ஒரு சாலைக்கு டிரம்ப் பெயரை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சூட்டினார். டொனால்ட் டிரம்ப் அவின்யூ என்ற பெயரில் அந்த சாலை அழைக்கப்படுகிறது.

Donald Trump india hyderabad Trump towers

டிரம்ப் டவர்

இதற்கிடையே டிரம்ப் பெயரில் மற்றொரு மிக பெரிய ஆடம்பர குடியிருப்பு திட்டம் தற்போது உருவாகி வருகிறது. இந்த திட்டத்தை ட்ரைபெக்கா டெவலப்பர்ஸ், ஐரா ரியால்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குகிறது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த திட்டத்தில் இரண்டு பிரம்மாண்ட டவர்கள் இடம்பெறும். ஒவ்வொரு கட்டிடமும் 65 மாடிகளை கொண்டதாக இருக்கும்.

சொகுசு குடியிருப்பு

மொத்தமாக சுமார் 22 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், 450க்கும் மேற்பட்ட ஆடம்பர குடியிருப்புகள் இதில் இடம்பெற உள்ளன. இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் மிக பெரிய டிரம்ப் பெயரிலான குடியிருப்பு திட்டமாகவும், தென்னிந்தியாவில் உயரமான குடியிருப்பு கட்டிடமாகவும் இது உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு திட்டத்தில் இதுவரை விற்பனை முழு வீச்சில் தொடங்கப்படவில்லை என்றாலும் மக்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வீடு ரூ.60 கோடி

குறிப்பாக ஒரு பென்ட்ஹவுஸ் சுமார் ரூ.60 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும், மேலும் இரண்டு பென்ட்ஹவுஸ்கள் தலா சுமார் ரூ.32 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டிரம்ப் டவரில் வீடுகளின் விலை சுமார் ரூ.5 கோடி முதல் ரூ.18 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிரம்ப் டவர் திட்டத்திற்கான கட்டுமான செலவு சுமார் ரூ.2,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்ட கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக இப்போது வலுவான அடித்தளத்தை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அது முடியவே 3 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது. ஒட்டுமொத்த கட்டுமான பணிகளும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் டிரம்ப் டவர்ஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. டிரம்ப் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வருவார் என்றும் அப்போதே இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

டிரம்ப் பெயர் மட்டுமே

இதேநேரம் இதில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்ன தான் டிரம்ப் தொழிலதிபராக இருந்தாலும் டிரம்பின் பெயர் இதில் பயன்படுத்தப்பட்டாலும் இந்த கட்டுமானத்தை டிரம்ப் நிறுவனம் மேற்கொள்ளாது. மாறாக இந்தியாவில் உள்ள ட்ரைபெக்கா டெவலப்பர்ஸ் தான் மேற்கொள்கிறார்கள். டிரம்ப்பின் பெயரில் கட்டுமானங்களை உருவாக்க இவர்களுக்கு லைசன்ஸ் மட்டுமே தரப்பட்டுள்ளது. டிரம்ப்பிற்கு சொந்தமான எந்தவொரு நிறுவனமும் நேரடியாக கட்டுமானத்தில் ஈடுபடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+