கணவருடன் பீச்சில் திருமண நாளை கொண்டாடிய மனைவி மாயம்.. ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்!.. போலீஸார் அதிர்ச்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் விசாகப்பட்டின கடற்கரையில் மூழ்கியிருப்பார் என கருதப்பட்ட மனைவி இரு தினங்கள் கழித்து நெல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஃபார்மா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஸ்ரீனிவாஸ். இவருக்கும் சாய்பிரியா என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி திருமணமானது.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய இரண்டமாண்டு திருமண நாளை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீனிவாஸும் சாய்பிரியாவும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர் கே கடற்கரைக்கு ஜூலை 25 ஆம் தேதி சென்றனர்.

கடற்கரை மணல்
அந்த கடற்கரை மணலில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த தம்பதி அங்கு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கடற்கரையில் விளையாடி அதையும் செல்பியாக எடுத்திருந்தனர். அப்போது திடீரென ஸ்ரீனிவாஸின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனால் சாய் பிரியாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து போய் போன் பேசியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

அதிர்ச்சி
போனை பேசிவிட்டு வந்த ஸ்ரீனிவாஸுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த இடத்தில் சாய் பிரியாவை காணவில்லை. இதனால் சாய்பிரியா கடல் அலையில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என ஸ்ரீனிவாஸ் அஞ்சினார். இதையடுத்து அங்கிருந்த போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

காவலர்கள்
பின்னர் கடற்படை காவலர்களுடன் இணைந்து போலீஸார் சாய்பிரியாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கிடைக்காததால் ஹெலிகாப்டர், கப்பல் மூலம் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன. சாய்பிரியா காணாமல் போன சம்பவம் விசாகப்பட்டின மாநகராட்சி மேயர் வரை சென்று. அவரும் தேடும் பணிகளை முடுக்கிவிட்டார். ஆனாலும் சாய்பிரியாவை காணவில்லை.

சாய்பிரியா
இப்படி இருக்கும் போது சாய்பிரியா பத்திரமாக இருக்கிறார் என்பது அவரது செல்போன் சிக்னல் மூலம் தெரிந்தது. அந்த சிக்னல் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக சாய்பிரியா தனது தாய்க்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

காதல்
அதில் நான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆந்திராவில் நெல்லூரில் ஒரு முறை சாய் பிரியாவின் செல்போன் சிக்னல் அங்கு ஆக்டிவ்வில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் ஸ்ரீனிவாஸை திருமணம் செய்து கொள்ள சாய் பிரியாவுக்கு விருப்பம் இல்லை என தெரிய வந்தது. திருமணத்திற்கு முன்பே ரவி என்பவரை சாய்பிரியா காதலித்து வந்ததும் திருமணமாகியும் அவருடனான பழக்கம் சாய்பிரியாவுக்கு இருந்ததும் தெரியவந்தது.

ஒரு கோடி செலவு
ஆர் கே கடற்கரையில் இருந்து சாய்பிரியா ரவியுடன் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். மேலும் கடல் அலையில் சிக்கியதாக கூறப்பட்ட சாய்பிரியாவை கண்டுபிடிக்க இதுவரை ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். சாய்பிரியாவையும் ரவியையும் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications