பசியால் மண்ணை தின்ற 2 வயது குழந்தை பலியான பரிதாபம்.. ஆந்திராவில் சோகம்!
ஹைதராபாத்: ஆந்திராவில் பசிதாங்க முடியாமல் மண்ணை தின்ற 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவாக மாறினாலும் பசியின் கொடுமையால் தவிப்பவர்களின் கூட்டம் ஒருபுறம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பல கோடிகளை வாரி இறைத்து பகட்டுக்காக பல்சுவை உணவுடன் ஆடம்பரமாக திருமணம் ஒருபுறம் நடக்க ஒரு வேலை சோற்றுக்கே வழியில்லாம் மரணத்தை சந்திக்கும் மக்களும் நாட்டில் உள்ளனர்.
அப்படி உணவின்றி பசியால் இறந்து போன 2 வயது குழந்தையின் மரணம்தான் பல மனங்களை உலுக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில்தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

4 குழந்தைகள்
அனந்தபூர் குதிபண்டலா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மகேஷ் - நீலவேணி தம்பதி. கடும் வறுமையில் வாடும் இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

சகோதரியின் குழந்தை
இந்நிலையில், நீலவேணி தனது சகோதரியின் 2 வயது குழந்தையையும் சேர்த்து வளர்த்து வந்துள்ளார். சில நாட்களாக ஒரு வேளை உணவு கூட இல்லாமல் நீலவேணி குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர்.

மண்ணை தின்ற குழந்தை
நீலவேணியின் குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்த குழந்தைகள் என்பதால் பசியை தாங்கிக்கொண்டனர். ஆனால் நீலவேணியின் சகோதரியின் 2 வயது குழந்தை பசியயை தாங்கிக்கொள்ள முடியாமல் மண்ணை தின்றுள்ளது.

குழந்தை மரணம்
தொடர்ந்து பசியால் மண்ணை சாப்பிட்ட அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனால் பதறிய நீலவேணியும் அவரது கணவரும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்துள்ளனர்.

காப்பகத்தில் ஒப்படைப்பு
தகவலறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த வருடம் அவர்களது மூன்றாவது குழந்தையும் பசியால் மண்ணை தின்று உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களிடமிருந்த 4 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பெரும் சோகம்
மேலும் மகேஷ் - நீலவேணி தம்பதிக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளனர். பசிக்கொடுமையால் மண்ணை தின்று 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications