Book My Show-ல் திடீரென "கூலி" முன்பதிவை முந்திய "வார் 2"! ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்கள் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சினிமா ரசிகர்களுக்கு ஒரு அசத்தல் செய்தி! நாளை, அதாவது இந்த வியாழக்கிழமை, இந்திய சினிமாவின் பொற்காலங்களில் ஒன்றாக அமையப் போகிறது. ஏனெனில், இரண்டு பிரம்மாண்டமான படங்கள், ரஜினிகாந்தின் 'கூலி' (Coolie) மற்றும் ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள 'வார் 2' (War 2) ஆகியன பாக்ஸ் ஆபிஸில் நேரடியாக மோதவுள்ளன.

சினிமா மோகத்தில் அதிகமாக திளைத்திருப்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தெலுங்கு மாநிலங்களாகும். அங்கு, இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆரம்பத்தில், 'கூலி' படத்திற்கு அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இன்று காலை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 'வார் 2' படம் ஒரு மணி நேர டிக்கெட் விற்பனையில் 'கூலி'யை முந்தியுள்ளது.

Coolie Rajinikanth

இன்று காலை 6 மணிக்கு மேல் முதல் ஒரு மணி நேரத்தில், புக் மை ஷோ தளத்தில் 'கூலி' படத்துக்கு 2.93K டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில், 'வார் 2' படத்துக்கு 3.64K டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இந்த போக்கு மாலை வரையில் தொடர்ந்தால், 'வார் 2' படம் 'கூலி' படத்தை விஞ்சி, ரஜினிகாந்தின் படத்துக்கு கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும், இரண்டு படங்களும் முதல் நாளில் பிரம்மாண்டமான வசூலை குவிக்கும் என்பது உறுதி. இறுதியில், படத்தின் கதை மற்றும் கன்டென்ட் மட்டுமே எந்தப் படம் வெற்றிக் கொடியை நாட்டும் என்பதை தீர்மானிக்கும்.

'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், 'வார் 2' படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இரண்டு படங்களிலும் பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். இது படங்களுக்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாளை மதியத்திற்குள் ஆந்திர, தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸில் எந்தப் படம் முன்னிலையில் இருக்கும் என்பது தெரியவரும். பொருத்திருந்து பார்ப்போம்.

கூலி, வார் 2

இரண்டு படங்களிலும் பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் 'கூலி' படத்தில் நடித்துள்ளனர். 'வார் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் உடன் கியாரா அத்வானியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த இரு படங்களின் மோதல் இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+