ஓவர் மழை.. தானாவே வெளியேவரும் "வைரம்".. பதறிப்போன விவசாயிகள்.. வயலில் ஒரே பரபரப்பு.. ஆச்சரியம்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 30 கேரட் வைரத்தை தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றி, அதை 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக ஜுன் 1ம் தேதியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த வருடம் தாமதமாக துவங்குகிறது. எப்படியும் செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரபிக்கடல்: இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. அதுவும் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில், புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக, 4 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.. அதேபோல வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும், பிரதீப் ஜான் கூறியிருந்தார்.
மழை மழை: அதேபோல, இந்திய வானிலை ஆய்வு மையம், சில அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளன. அந்தவகையில், பல்வேறு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி வருகின்றன.. இதில் ஆந்திர பிரதேசமும் ஒன்றாகும். கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்திருக்கிறது.
இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் உள்ள வயல் வெளிகளில், மழைக்கு பிறகு வைரக்கற்கள் தானாகவே வெளியே வருகிறதாம்..
வைரக்கற்கள்: அதாவது, 2019-ம் வருடம், விவசாயி ஒருவர் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரத்தையும், 2 வருடங்களுக்கு முன்பு விவசாயிகள் 2 விலைமதிப்புள்ள வைர கற்களையும் கண்டுபிடித்து உள்ளூர் வணிகர்களிடம் நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாக சொல்கிறார்கள்..
இதனால், இந்த வைர கற்களை எடுப்பதற்காக விவசாயிகள் சிலர் முயற்சித்து வந்துள்ளனர்.. இதற்காகவே, தினமும் தங்களுடைய தினசரி வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, வயல் வெளிகளில் வைரக்கற்களை தேடி வருகிறார்களாம்.. இதற்காகவே தற்காலிக கூடாரங்களும் அமைத்திருக்கிறார்கள்..
உண்மையா: இப்படிப்பட்ட சூழலில், வைரக்கற்கள் விவசாயி ஒருவருக்கு கிடைத்துள்ளது.. அவருடைய விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டுபிடித்ததாகவும், அதை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.. இதெல்லாம் உண்மையா? புரளியா? என்றுகூட தெரியவில்லை.. ஆனால், இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications