Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.2500.. கைக்கொடுத்த அந்த 6 வாக்குறுதி! தெலுங்கானாவை முதல் முறையாக காங்கிரஸ் வென்றது எப்படி?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் இந்த வெற்றிக்கு அவர்கள் அளித்த 6 முக்கிய வாக்குறுதிகள் கைக்கொடுத்துள்ளது.

தெலங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

 What are the 6 guarantees from Congress? How its helps to party victory? details here

இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து முடிந்துள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடந்த நிலையில் முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க அவர் முயன்றார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மாறாக காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

இதுதவிர பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகளும் செல்வாக்கை நிரூபிக்கும் நோக்கத்தில் போட்டியிட்டு பின்னடைவை சந்தித்துள்ளன. முன்னதாக பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என கணித்திருந்தன. தற்போது அது நடந்துள்ளது. இந்நிலையி் தான் காங்கிரஸ் வெற்றிக்கு 6 முக்கிய வாக்குறுதிகள் தான் பிரதான காரணமாக இருந்துள்ளது. பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகள் வழங்கிய நிலையில் அது கைக்கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. அது கர்நாடகா தேர்தலில் எதிரொலித்து காங்கிரஸை வெற்றி பெற வைத்தது. அந்த வகையில் கர்நாடகா பாணியை பின்பற்றி அதனை விட கூடுதலாக தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 6 வாக்குறுதிகளை அளித்துள்ளது. இது தான் காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டுகளாகி உள்ளது.காங்கிரஸ் கட்சி வழங்கிய 6 வாக்குறுதிகள் வருமாறு:

மாதம் ரூ.2500: மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500க்கு வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தான் முதல் வாக்குறுதியாகும்.

விவசாயிகள் திட்டம்: ரிது பரோசா எனும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி விவசாயிகளின் குத்தகை நிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். நெல் பயிர் விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2வது வாக்குறுதியாகும்.

200 யூனிட் இலவச மின்சாரம்: க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்தது. இது 3வது வாக்குறுதியாகும். அடுத்ததாக இந்திரம்மா இண்ட்லு திட்டத்தின் கீழ் அனைத்து தெலுங்கானா இயக்க போராளிகளுக்கும் 250 சதுர அடி நிலம் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாதவர்ளுக்கு வீட்டு மனை மற்றும் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது 4வது வாக்குறுதியாகும்.

இளைஞர்களுக்கான திட்டம்: யுஹ விகாசம் எனும் திட்டத்தின் கீழ் இளைஞர்களை கவரும் வகையில் அறிவிப்பகள் வெளியிடப்பட்டன. அதன்படி மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பரோசா அட்டை வழங்குதல், ஒவ்வொரு மண்டலத்தில் சர்வதேச தரத்தில் பள்ளிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது 5வது வாக்குறுதியாகும்.

முதியோருக்கான திட்டம்: முதியவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்குவது மற்றும் ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன்மூலம் முதியவர்கள் செலவின்றி மருத்துவ சிகிச்சைகளை பெறலாம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த 6 வாக்குறுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானா தேர்தலில் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+