சின்ன வெங்காய மூட்டை நகர்ந்து நகர்ந்து போகுது.. அப்படியே மலைத்த போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
ஹைதராபாத்: ஆந்திர மாநில எல்லை செக்போஸ்ட்டில், வெங்காய மூட்டைகளை பார்த்து அதிகாரிகள் அரண்டு போய்விட்டார்களாம்.. என்ன காரணம்?
சில முக்கிய கடல் வாழ் உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது.. அந்தவகையில், இந்திய கடலில் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்து அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

கடத்தல்கள்: அதேபோல, இலங்கைக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கொண்டு செல்வதும், இலங்கையில் இருந்து பல்வேறு பொருட்களை கடத்தி வரும் நிகழ்வுகளும் தொடர் கதையாகிவிட்டது.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளும், இலங்கைக்கு கடத்திச்செல்லும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் ஆமைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
ஆமைகள்: இதற்கு காரணம், ஆமைகள் மருத்துவ குணம் உடையவை. மருந்துகள் தயாரிப்பதற்கு மட்டுமல்லாமல், பெரிய பெரிய பங்களா வீடுகளிலுள்ள தொட்டிகளில், அலங்கார உயிரினமாகவும் வளர்க்கிறார்கள்.. அதேபோல, இந்த ஆமைகளை வீடுகளில் வளர்ப்பது அதிர்ஷ்டம் என்றும் கருதுகிறார்கள்.. அதிலும், சிவப்பு காதுகள் கொண்ட ஆமைகள் மிகவும் அபூர்வமானவையாம்.. அதனால், இதுபோன்ற ஆமைகளை அதிக அளவில் கடத்துகின்றனர்.
இதோ, நேற்றுகூட 2 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் ஃபோகேஸ்பேட்டை செக்போஸ்ட்டில், வனத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு லாரி வந்தது.. எனவே, அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, வெங்காய மூட்டைகள் நிறைய இருந்தன..
சோதனைகள்: வெறும் வெங்காய மூட்டைகள் மட்டும் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த மூட்டைகளை முழுமையாக பிரித்து சோதனை நடத்தினார்கள்.
அப்போதுதான், 20 சாக்கு மூட்டைகளில் ஆமைகள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. பிறகு லாரியில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கோனசீமா மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் இருந்து ஒடிசாவிற்கு ஆமைகளை கடத்தி செல்வதாக வாக்குமூலம் தந்தனர். இதையடுத்து, ஆமைகளை கடத்தி வந்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
உயிருடன் மீட்பு: இந்த ஆமைகளையெல்லாம் உயிருடன் பிடித்து மூட்டை கட்டி, லாரியில் கடத்தி கொண்டு வந்திருக்கிறார்கள்.. இதனால், 163 ஆமைகள் வழியிலேயே இறந்துவிட்டதாம்.. உயிருடன் இருந்த 1,426 ஆமைகளை மீட்ட அதிகாரிகள், வனப்பகுதியில் தண்ணீர் உள்ள இடத்தில் ஆமைகளை கொண்டுபோய் பத்திரமாக விட்டுவிட்டு வந்தார்கள்..!!












Click it and Unblock the Notifications