Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடு மேய்க்கும் பெண்ணால் "நெளியும்" ஜாம்பவான்கள்.. மீண்டும் பரேலக்கா.. மலைக்கும் அரசியல் தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இந்த முறையும் சுயேச்சையாக களமிறங்குகிறார் இளம்பெண் பரேலக்கா.. இதனால் தெலுங்கானா அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புமும், ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. ஏன் தெரியுமா?

யாரிந்த பெண் பரேலக்கா தெரியுமா? இதோ அவரை பற்றின ஒரு குட்டி அறிமுகம். 25 வயதுதான் ஆகிறது ஸ்ரீஷா என்ற பெண்ணுக்கு.. பிகாம் பட்டதாரி.. "பரேலக்கா" என்றால் மாடு மேய்க்கும் பெண் என்று அர்த்தம்.

Where is Social Media Celebrity Barelakka going to compete and Big Expectation from Telanganas nagarkurnool constituency

வறுமை குடும்பம்: மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீஷா.. இவரது அப்பா ஒரு மொடா குடிகாரர்.. வீட்டிலிருக்கும் பொருட்களை விற்று குடித்துவிடுவார்..... இதனால் நொந்துபோன ஸ்ரீஷா, எப்படியாவது ஒரு வேலையில் குடும்பத்தை காப்பாற்றிவிடலாம் என்று என்று முயற்சித்தார்..

கடும் முயற்சி: க்ரூப் I, க்ரூப் II, III மற்றும் IV தேர்வுகளை எழுதியும் காத்திருந்தார். கடைசிவரை வேலை கிடைக்கவில்லை. கடைசியில் விரக்தியில், வேறு வழியின்றி மாடு மேய்க்க இறங்கிவிட்டார்..

கடந்த 2021-ம் ஆண்டு மாடுமேய்க்கும்போது, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார் ஸ்ரீஷா.. அதில், "நான் தான் பரேலக்கா.. எவ்வளவுதான் படிச்சி, டிகிரி வாங்கினாலும் நமக்கு இந்த தெலுங்கானா வேலை தராது. அதனாலதான் பிகாம் படிச்சிட்டு, என் அம்மா தந்த பணத்தில், 4 எருமை மாடு வாங்கிட்டு, இப்படி மேய்ச்சிட்டு இருக்கேன். இன்னும் எம்பிஃல், பிஎச்டி படித்தவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்காது" என்று கூறியிருந்தார்.

வீடியோ: இந்த வீடியோ அப்போது மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. குறிப்பாக, இளைஞர்களின் ஆதரவு ஸ்ரீஷாவுக்கு கிடைக்க ஆரம்பித்தது.. 10 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை ஸ்ரீஷாவுக்கு பெற்று தந்தது.

தன்னுடைய மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சனையையே மையமாக வைத்தே, கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாகக களமிறங்கினார் ஸ்ரீஷா.. உடனே தெலுங்கானா பல்கலைக்கழக மாணவர்கள் மொத்த பேரும் ஸ்ரீஷாவுக்காக பிரச்சாரத்தில் குதித்தனர்.. "இளவரசி பரேலக்கா" என்ற செல்லப்பெயரையும் ஸ்ரீஷாவுக்கு சூட்டினார்கள்.. பிரச்சாரம் செல்லுமிடமெல்லாம் பாடல்களை பாடி, பொதுமக்களை கவர்ந்து பரேலக்காவுக்காக மாணவர்கள் வாக்குகளை திரட்டினார்கள்.

காங்கிரஸ்: இத்தனைக்கும் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதியின் சிட்டிங் எம்எல்ஏ பி. ஹர்ஷவர்தன் ரெட்டி ஆகியோருக்கு எதிராக போட்டியிடும் 14 பேரில் ஒருவராக களமிறங்கினார் ஸ்ரீஷா. இறுதியில், 5,754 ஓட்டுக்களையும் ஸ்ரீஷா பெற்றிருந்தார்.

இந்த முறையும் நாகர்கர்னூல் தொகுதியில் போட்டியிட தயாராகிவிட்டார்.. இதற்கான வேட்பு மனு தாக்கலையும் செய்துவிட்டார் ஸ்ரீஷா.. வேலை கிடைக்காமல், தேர்தல் அரசியலில் தான் நுழைய காரணமாக இருந்த பிஆர்எஸ் அரசை, இன்றும் எதிர்த்து போட்டியிட்டு களமிறங்கியிருக்கிறார்.

அதிரடி களம்: சுயேச்சையாக போட்டியிட போகும் முடிவை இன்றைய தினம்தான் அறிவித்திருக்கிறார் பலேக்கா.. பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சார்பில் சிட்டிங் எம்பியும், பாஜக வேட்பாளருமான பொதுகாந்தி ராமுலு, காங்கிரஸ் முன்னாள் எம்பி மல்லு ரவி மற்றும் முன்னாள் அதிகாரி ஆர்எஸ் பிரவீன் குமார் ஆகியோரை எதிர்த்து பரேலக்கா போட்டியிடுகிறார்.

இதனால் இளைஞர்கள் படுகுஷியாகி உள்ளனர்.. பரேலக்காவுக்காக இந்த முறையும் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார்களாம்.. மாநிலத்தில் நிலவும் வேலை வாய்ப்பை மையப்படுத்தி, தேர்தலில் இந்த பெண் இறங்கியிருப்பது, சீனியர் கட்சிகளையே நெளிய வைத்து வருகிறது.. ஆகமொத்தம், நாகர்கர்னூல் தொகுதி முழுக்க, வலிய வலிய எதிரொலிக்க போகிறது இளம் வேட்பாளர் ஸ்ரீஷாவின் குரல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+